ஓமை |
316 |
பொன் செய் பாண்டில் பொலங்கலம் நந்த, |
|
தேர் அகல் அல்குல் அவ் வரி வாட, |
|
இறந்தோர்மன்ற தாமே பிறங்கு மலைப் |
|
புல் அரை ஓமை நீடிய |
|
5 |
புலி வழங்கு அதர கானத்தானே. |
தலைமகள் மெலிவுக்கு நொந்து, தலைமகன் பிரிவின்கண் தோழி கூறியது. 6 |
321 |
உலறு தலைப் பருந்தின் உளி வாய்ப் பேடை |
|
அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறிப் |
|
புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து, |
|
மொழிபெயர் பல் மலை இறப்பினும், |
|
5 |
ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே. |
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகள் குணம் நினைந்து இரங்கிச் சொல்லியது. 1 |