ஆம்பல் |
21 |
முள்ளி நீடிய முது நீர் அடைகரைப் |
|
புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும் |
|
தண் துறை ஊரன் தெளிப்பவும், |
|
உண்கண் பசப்பது எவன்கொல்? அன்னாய்!' |
|
'புறத்தொழுக்கம் எனக்கு இனி இல்லை' என்று தலைமகன் தெளிப்பவும், 'அஃது உளது' என்று வேறுபடும் தலைமகட்குத் தோழி சொல்லியது. 1 |