ஆம்பல் |
34 |
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப் |
|
பொய்கைப் பூத்த, புழைக் கால் ஆம்பல் |
|
தாது ஏர் வண்ணம் கொண்டன |
|
ஏதிலாளர்க்குப் பசந்த என் கண்ணே. |
|
இதுவும் அது. 4 |
35 |
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப் |
|
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் |
|
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே; |
|
இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே. |
|
வாயிலாய்ப் புகுந்தார் தலைமகன் குணம் கூறிய வழி, 'அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுது காண் என் மேனி பசந்தது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 5 |
40 |
'அம்ம வாழி, தோழி! மகிழ்நன் |
|
ஒண் தொடி முன்கை யாம் அழப் பிரிந்து, தன் |
|
பெண்டிர் ஊர் இறைகொண்டனன்' என்ப |
|
கெண்டை பாய்தர அவிழ்ந்த |
|
5 |
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே. |
உலகியல் பற்றித் தலைவன் தன் மனைக்கண் ஒரு ஞான்று போனதே கொண்டு, 'அவ்வழிப் பிரியாது உறைகின்றான்' என்று, அயற் பரத்தையர் பலரும் கூறினார் என்பது கேட்ட காதல்பரத்தை, அவர் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது |
57 |
பகலில் தோன்றும் பல் கதிர்த் தீயின் |
|
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன |
|
இவள் நலம் புலம்பப் பிரிய, |
|
அனைநலம் உடையோளோ மகிழ்ந! நின் பெண்டே? |
|
தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று என்பது கேட்ட தோழி அவனை வினாயது. 7 |
65 |
கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல் |
|
சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர! |
|
புதல்வனை ஈன்ற எம் மேனி |
|
முயங்கன்மோ தெய்ய; நின் மார்பு சிதைப்பதுவே. |
|
ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. 5 |
68 |
கன்னி விடியல், கணைக் கால் ஆம்பல் |
|
தாமரை போல மலரும் ஊர! |
|
பேணாளோ நின் பெண்டே |
|
யான் தன் அடக்கவும், தான் அடங்கலளே? |
|
பரத்தை தான் தலைமகளைப் புறங்கூறி வைத்து, தன்னைத் தலைமகள் புறங்கூறினாளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி தலைமகற்குச் சொல்லியது. 8 |
72 |
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத் |
|
திதலை அல்குல், துயல்வரும் கூந்தல், |
|
குவளை உண்கண், ஏஎர் மெல்லியல் |
|
மலர் ஆர் மலிர்நிறை வந்தென, |
|
5 |
புனல் ஆடு புணர்துணை ஆயினள், எமக்கே. |
தலைமகள் புலவி நீக்கித் தன்னோடு புதுப் புனல் ஆட வேண்டிய தலைமகன் களவுக் காலத்துப் புனலாட்டு நிகழ்ந்ததனை அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது. 2 |
91 |
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து |
|
வெறி மலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும் |
|
கழனி ஊரன் மகள் இவள்; |
|
பழன வெதிரின் கொடிப் பிணையலளே. |
|
குறைவேண்டிப் பின்னின்று வந்த தலைமகற்குத் தோழி, 'இவள் இளையள் விளைவு இலள்' எனச் சேட்படுத்தது. 1 |
93 |
எருமை நல் ஏற்றினம் மேயல் அருந்தென, |
|
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா, |
|
செய்த வினைய மன்ற பல் பொழில் |
|
தாது உண் வெறுக்கைய ஆகி, இவள் |
|
5 |
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே. |
முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால் பண்டையளவு அன்றி வண்டுகள் மொய்த்தனவாக, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவிய செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. 3 |
96 |
அணி நடை எருமை ஆடிய அள்ளல், |
|
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் |
|
கழனி ஊரன் மகள், இவள்; |
|
பழன ஊரன் பாயல் இன் துணையே. |
|
பரத்தையர் பலரோடும் ஒழுகுதல் கண்டு பொறாதிருந்த தலைமகள், தலைமகன் மனைக்கண் புகுந்துழி, உடன்படுதல் கண்ட வாயில்கள் தம்முள்ளே சொல்லியது. 6 |
215 |
கட்டளை அன்ன மணி நிறத் தும்பி, |
|
இட்டிய குயின்ற துளைவயின் செலீஇயர், |
|
தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர் |
|
தீம் குழல் ஆம்பலின், இனிய இமிரும் |
|
5 |
புதல் மலர் மாலையும் பிரிவோர் |
அதனினும் கொடிய செய்குவர் அன்னாய்! |
|
இரவுக்குறி நயந்த தலைமகள், பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியது. 5 |