ஆமை |
43 |
அம்பணத்து அன்ன யாமை ஏறி, |
|
செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும் |
|
யாணர் ஊர! நின்னினும் |
|
பாணன் பொய்யன்; பல சூளினனே. |
|
பாணன் வாயிலாகப் புகுந்து தெளிப்ப மறுத்த தலைமகள், பாணனோடு தலைவன் புகுந்து தெளித்துழிச் சொல்லியது. 3 |
44 |
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத் |
|
தாய் முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு, |
|
அதுவே ஐய, நின் மார்பே; |
|
அறிந்தனை ஒழுகுமதி; அறனுமார் அதுவே. |
|
பரத்தையர் மனைக்கண்ணே பல் நாள் தங்கி, தன் மனைக்கண்ணே வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 4 |
81 |
குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை |
|
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும், |
|
மலர் அணி வாயில் பொய்கை, ஊர! நீ |
|
என்னை 'நயந்தனென்' என்றி; நின் |
|
5 |
மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே. |
தன்னைக் கொடுமை கூறினாள் தலைமகள் என்பது கேட்ட பரத்தை, தலைமகன் வந்து தன்மேல் அன்புடைமை கூறினானாக, அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 1 |