பாடினோர் முதலியவர்களின் வரலாறு

6, பேயனார் : - இந்நூலின் ஐந்தாநூறாகிய முல்லைத் திணையைப் பாடிய இவர்
கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். முல்லைத் திணை வளங்களை விளங்கப் பாடுதலில் மிக்க
ஆற்றலுடையவர். மற்றத் தொகைகளுள்ளே குறுந்தொகையில் மட்டும் 4-பாக்கள் இவர்
செய்தனவாக உள்ளன. அவற்றுள், மூன்று செய்யுட்கள் முல்லைத் திணையைக் குறித்தனவே. பேயனென்றும், பேயாரென்றும் இவர் பெயர் பிரதிகளிற் காணப்படுகின்றது.
யாப்பருங்கலவிருத்தியுரையில்,

1 “கறைப்பற் பெருமோட்டுக் காடு கிழவோட்
கரைத்திருந்த சாந்தைத்தொட் டப்பேய்
மறைக்குமோ மாட்டாது மற்றுந்தன் கையைக்
குறைக்குமாங் 2கூர்ங்கத்தி கொண்டு”

என்னும் வெண்பாவை மேற்கோளாக எடுத்துக் காட்டிய அந்நூலுரையாசிரியர், ‘இது பூதத்தாரும்,
3காரைக்காற்பேயாரும்
பாடியது ; இதுவும் இரண்டாமடி குறைந்து வந்தது கண்டு கொள்க’
என்று எழுதியிருத்தலாற் காரைக்காற்பேயாரென்று ஒருவர் பண்டைக்காலத்திற் பாடும்
வன்மையுள்ளவராக இருந்தாரென்று மட்டும் _________________________________________________________________   
1 இவ்வெண்பா, மிக்க வேறுபாட்டுடன் கம்பர் பாடியதாகத் தனிப்பாடற்றிரட்டிற் காணப்படுகின்றது
2 ‘கூன்கத்தி ‘ என்றும் பாடம்.
3 காரைக்காற் பேயம்மையாரென்றும் பிரதிபேதமுண்டு. தெரிகின்றது. அவரும் இவரும்
ஒருவரோ வேறோ யாதும் புலப்படவில்லை.