| உடைபுலம் - தோற்றோடும் போர்க்களம் | 7-49 | 
| உடைய - தோற்றொழிய | 5-56 | 
| உடையவை - ஆடையினையுடையை | 1-56 | 
| உடையை - உடையையாய் | 4-51 | 
| உட்கி - அஞ்சி | 14-25 | 
| உணர்த்தா - உணர்த்த | 6-102 | 
| உணாக்கால் - உண்ணாதொழியின் | 19-94 | 
| உண்கண் - மையுண்ட கண் | 6-96 | 
| உண்கோ - நுகர்வேனோ | 9-30 | 
| உண்டி - உணவு | 2-65 | 
| உண்டிகை - திரள் | 6-36 | 
| உண்ணு - உண்டு | 11-28 | 
| உத்தி - படப்பொறி | 12-4 | 
| உந்தி - கொப்பூழ் | 13-53 | 
| உந்துவளி - தள்ளுகின்ற காற்று | 2-7 | 
| உந்துவோர் - செலுத்துவோர் | 10-29 | 
| உப்பால் - உப்பக்கம் | 11-8 | 
| உமை - இறைவி | 5-28 | 
| உம்பர் - தேவர் | 11-70 | 
| உயர்நிற்ப - உச்சமாக | 11-7 | 
| உயர்ந்தவர் - முனிவர் | 9-2 | 
| உயர்ந்தன்று - உயர்ந்தது | 12-95 | 
| உயர்ந்துழி - குறிஞ்சி நிலம் | 7-15 | 
| உயர்பு - உயர்ந்த பிறப்பு | 5-19 | 
| உய்யாது செல்லாமல் | 11-110 | 
| உரமிலி - திண்மையில்லாதவன் | 12-51 | 
| உரவுரும் - வலிய இடி | 7-2 | 
| உராய் - பரந்து | 6-1 | 
| உரி - உரிய | 19-12 | 
| உரிது - உரியதாக | 13-13; 18-55 | 
| உரிமை மாக்கள் - மடையர் | 8-121 | 
| உரு - அழகு | 11-59 | 
| உரு - நிறம் | 19-99 | 
| உருகெழு - அழகு பொருந்திய | 3-23 | 
| உருங்கு - உண்ணுகின்ற | 4-42 | 
| உருத்து - சினந்து | 2-36 | 
| உருபு - உருவம் | 2-65 | 
| உருபு - நிறம் | 3-3 | 
| உருவத்தீ - அழகிய நெருப்பு | 19-99 | 
| உருவம் - ஞானக் கண்ணாற் காணப்படும் வடிவம் | 4-31 | 
| உருவினவை - வடிவினையுடையை | 1-59 | 
| உருள்பு - உருண்டு | 2-46 | 
| உரைதர - புகழ | 12-32 | 
| உரைத்தி - சொல்லுதி | 11-62 | 
| உரையோடிழிந்து - சொல்லுதற்றொழிலோடு சென்று | 6-56 | 
| உரைவழுவ - சொல் பிழைபட | 12-65 | 
| உவகையள் - களிப்பையுடையவள் | 7-18 | 
| உவணம் - கருடன் | 2-60; 4-42 | 
| உவவுமதி - முழுத்திங்கள் | 10-76 | 
| உவன் - இவன் | 12-55 | 
| உவ்வும் - உவையும் | 2-58; 4-33 | 
| உழக்கி - செய்து | 5-2 | 
| உழக்குநர் - கலக்குவார் | 11-53 | 
| உழக்கும் - வருந்தும் | 9-34 | 
| உழந்த - வருந்திய | 7-13 | 
| உழவர் - உழுதொழில் செய்வோர் | 7-16 | 
| உழவு - உழப்பு | 10-103 | 
| உழுவை - புலி | 14-12 | 
| உழை - ஓரிசை | 11-127 | 
| உளர் - அசைக்கின்ற | 21-63 | 
| உளை - வருத்தம் | 10-66 | 
| உள் - சித்தம் | 4-1 | 
| உள்படுவோர் - அறிவோர் | 19-47 | 
| உள்வழி - உடையோரிடத்து | 4-51 | 
| உள்ளிய - கருதிய | 7-6 | 
| உள்ளீடு - அகத்திடப்பட்ட பொருள் | 2-12 | 
| உள்ளுநர் - நினைப்போர் | 2-35 | 
| உள்ளுள் - உள்ளே உள்ளே | 7-21 | 
| உறப்பூட்ட - இறுகப்பூட்டுதலாலே | 6-99 | 
| உறழும் - மாறுபடும் | 13-25 | 
| உறழ்பு - ஒத்து | 2-37 | 
| உறுகனல் -மிக்கெரியுந் தீ | 2-63 | 
| உறுத்தர - நெருக்கும்படி | 6-37 | 
| உறுவரை - பெரியமலை | 4-17 | 
| உறைத்தும் - மிக்கும் | 12-66 | 
| உறைபதி - வாழும் ஊர் | 18-55 | 
| உறையுள் - தங்குமிடம் | 3-27 |