| கொடித்தேரான் வார்த்தை - தமிழ் (ப.தி.) | 10-3 |
| கொடியவை - கொடியினையுடையை | 1-57 |
| "- கொடியுடையை | 15-56 |
| கொடியிணர் - நீண்ட பூங்கொத்து | 8-24 |
| கொடியேற்றுவாரணம் - கொடியேற்றுதற்குரிய யானை | 19-91 |
| கொடிறு - கபோலம் (கன்னம்) | 6-17 |
| கொடுமை - மனக்கோட்டம் | 4-50 |
| கொடும்பாடு - பொய்மை | 2-76 |
| கொடுவினை - தீவினை | 5-6 |
| கொட்டை - தாமரைப் பொகுட்டு | 5-70 |
| கொண்டிய - கொள்ளை கொள்வன | 10-120 |
| கொண்மார் - நுகரவேண்டி | 19-10 |
| கொண்மூ - மேகம் | 22-2 |
| கொம்பர் - பூங்கொம்பு போன்ற பெண் | 12-50 |
| கொம்மென - இசைக்குறிப்பு | 19-44 |
| கொய்பு - கொய்து | 2-45 |
| கொழுநிழல் - இருண்ட நிழல் | 4-66 |
| கொள - பறிக்க | 8-92 |
| கொளை - பண் | 7-77 |
| கொளை - பாட்டு | 11-125 |
| கொளுவ - பூட்ட | 5-22 |
| கொள்ளும் கருவி - இந்திரியம் | 13-16 |
| கொற்றவை - இறைவி | 11-100 |
| கொன்றுணல் - கொன்றுதின்னல் | 5-6 |
கோ | |
| கோகுலம் - குயில் | 9-65 |
| கோடா - வளையாத | 13-39 |
| கோடு - கரை | 20-24 |
| கோட்ட - சங்கையுடையோனே | 3-87 |
| கோட்டி - கூட்டம் | 12-50 |
| கோட்டினர் - கொம்பினையுடையோர் | 6-34 |
| கோதை - மகளிர் அணியு மாலை | 6-46 |
| கோதையர் - மகளிர் | 7-43 |
| கோதையின் - மாலையை ஒத்த நின்னைப்போல | 6-90 |
| கோத்தை - குற்றம் (ப.தி.) | 10-3 |
| கோலங்கொள் - ஒப்பனையாம் பொருட்டு | 10-93 |
| கோலம் - அழகு | 11-97 |
| " - உருவம் | 2-16 |
| " - வேடம் | 11-100 |
| கோலா - கோலாக | 12-58 |
| கோலெரி - தீவர்த்தி | 17-6 |
| கோல் - செங்கோல்; காம்பு | 3-74 |
| கோல் - தேர்நடத்துங் கோல் | 11-50 |
| கோழி - உறையூர் (ப.தி.) | 7-10 |
| கோள்இருள் - கண்ணைக் கொள்கின்ற இருள் | 4-57 |
| கோவல - பசுக்களைக் காத்தல் வல்லவனே | 3-83 |
| கோவை - மேகலை | 6-15 |
ச | |
| சகடம் - வண்டி | 10-17 |
| சங்கம் - ஒரு பேரெண் | 2-13 |
| சடை - திருவாதிரை | 11-2 |
| சண்பகம் - ஒருவகை மரம் | 11-18 |
| சமம் - இசைஇயக்கத்துள் ஒரு நிலை (மத்திமம்) | 19-42 |
| சரணத்தர் - காலையுடையர் | 10-10 |
| சருமம் - தோல் | 21-4 |
| சலதாரி - சிவபெருமான் | 9-6 |
| சலப்படையான் - மதவேள் | 6-57 |
| சலம் - சினம் | 15-58 |
| " - நீர் | 10-90 |
| சனம் - மாந்தர் | 10-9 |
சா | |
| சாந்தாற்றி - ஆலவட்டம் | 21-30 |
| சாபம் - வில் | 5-65 |
| சாம்ப - கெட | 4-18 |
| சாயல் - அருள் | 2-56 |
| " - மென்மை | 4-25 |
| சாய்த்தோய் - அழித்தவனே | 4-47 |
| சாரிகை - யானை முதலியவற்றின் செலவு | 6-36 |
| சார்ச்சார் - இடந்தோறும் | 16-32 |
| சாலினி - அருந்ததி | 5-44 |
| சாலார் - பொருந்தார் | 5-40 |
| சால் - நிரம்பிய | 2-53 |
| சால்வ - சால்புடையோனே | 5-14 |
| சாவாமரபின் - சாவாத்தன்மை போல | 2-71 |
| சாறு - திருவிழா | 8-96 |