| புன்னம்புலரி - வைகறை | 6-58 |
| பு ன்னாகம் - புன்னை | 11-16 |
பூ | |
| பூசல் - போர் | 10-28 |
| பூசை - பூனை | 19-50 |
| பூண் - அணிகலன் | 4-45 |
| பூண்டதை - அணிந்தது | 21-10 |
| பூத்தபுகை - பொலிவுற்ற நறுமணப் புகை | 16-53 |
| பூத்தனள் - பூப்பெய்தினள் | 16-24 |
| பூத்தன்று - பொலிந்தது | 16-19 |
| பூநலம் - பூவினழகு | 16-18 |
| பூநீர் - அரக்குநீர் | 16-21 |
| பூநுதல் - அழகிய நெற்றி | 20-4 |
| பூந்தாரான் - முருகப்பெருமான் | 6-55 |
| பூந்துகில் - பூத்தொழிலையுடைய ஆடை | 17-1 |
| பூரித்த - நிரப்பிய | 12-68 |
| பூரியமாக்கள் - கீழ்மக்கள் | 6-48 |
| பூவன் - பிரமன் | 1-46 |
| பூவினுட் பிறந்தோன் - பிரமன் | 3-13 |
| பூவை - காயா |
1-6; 4-29 |
பெ | |
| பெட்புறும் - விரும்புகின்ற | 15-8 |
| பெண்டின் - வழிமுறைக் கிழத்தியாகிய வள்ளி காரணமாக | 9-35 |
| பெயரிய - பெயர்பெற்ற | 2-16;
5-5 |
| பெயர் - புகழ் | 15-35 |
| பெயர்குவை - ஒழிகுவை | 5-18 |
| பெயர்த்தந்து - பெயர்த்து | 10-50 |
| பெயர்வானை - போகின்றவனை | 11-47 |
| பெயலால் - மழையாலே | 7-8 |
| பெருங்கலி - கடல் | 15-36 |
| பெரும்பக்கம் - வளர்பிறைப் பக்கம் | 11-34 |
| பெரும்பெயர் - பெரியபுகழ் | 5-50;
15-64 |
| பெருவாரி - ஆகாய கங்கை | 9-4 |
பே | |
| பேஎ - அச்சம் |
5-14; 7-84 |
| பேஎவிழவு - வெறியாட்டு விழா | 5-14 |
| பேணாது - உண்மையறியாமல் | 7-67 |
| பேணுதும் - போற்றுகின்றேம் | 2-67 |
| பேது - துன்பம் | 7-67 |
| பேதை - அறியாமை | 9-48 |
| " - பேதைப் பருவத்தினள் | 19-58 |
| பேராள - புகழுடையவனே | 3-39 |
பை | |
| பைங்கண் - பசிய உடம்பு | 3-82 |
| பைங்கண் பார்ப்பான் - சிவபெருமான் | 5-27 |
| பைஞ்சுனை - பசிய சுனை | 5-48 |
| பைதல் - குளிர் | 11-75 |
| பைந்தடம் - பசிய குளம் | 6-87 |
| பைம்பூண் - பசிய அணிகலன் | 3-53 |
பொ | |
| பொசி - ஒழுகும் | 12-98 |
| பொதியின் முனிவன் - அகத்தியன் | 11-11 |
| பொதிர்த்த - பொங்கின | 21-25 |
| பொதுவி - பொதுமகள் | 20-58 |
| பொய்தன் மகளிர் - விளையாட்டு மகளிர் | 20-59 |
| பொய்யாடல் - காமக்குறிப்பில்லாத விளையாட்டு | 11-89 |
| பொய்யுமல்ல - பொய்மையுடையனவுமல்ல | 5-16 |
| பொருந்தலை - தொடாதே | 16-23 |
| பொருகளம் - போர்க்களம் | 11-60 |
| பொருப்பன் - பாண்டியன் | 22-1 |
| பொருப்பு - மலை | 21-9 |
| பொருவேம் - போரிடுவோம் | 1-26 |
| பொருளியல் பிற்றண்டமிழ் - பொருளிலக்கணமமைந்த | 9-25 |
| குளிர்ந்த தமிழ் பொலங்கலம் - பொற்கலம் |
11-79 |
| பொலஞ்சொரி - பொன்னை வழங்குகின்ற | 10-126 |
| பொலந்தார் - பொன்மாலை | 14-10 |
| பொலம் - பொன் | 2-22 |
| பொலம்படை - பொற்பட்டம் | 11-52 |
| பொலம்பரப்பும் - பொன்னைப்பரப்புகின்ற | 10-128 |
| பொலம்புரிசை - பொன்மதில் (ப-தி) | 2-26 |
| பொலம்புரியாடை - பொன்னாடையுடையோனே | 3-88 |
| பொழிந்தன்று - பொழிந்தது | 6-2 |
| பொழில் - சோலை | 7-42 |
| பொழிற்பாயல் - சோலையிடத்துப் படுக்கை | 8-40 |
| பொறி - புள்ளி |
2-32; 5-60 |