32 ஆசிரியர்கள் வரலாறு


நாகனார் (அகம். 59.) தம் பாடலுட் கூறிப் பாராட்டுதலானும் இவர் கூறிய கார்கால வருணனையைக் கல்வியிற் சிறந்தவரெனப் பெற்ற கம்பர் தாமும் அப்படியே கொண்டு கார்காலப் படலத்து அமைத்திருத்தலானும் சில சொற்களின் பொருள்களை அறிவுறுத்தற்கு, திருக்குறளுரையில் பரிமேலழகரும் தொல்காப்பிய வுரையில் பேராசிரியர் முதலியவர்களும் இவர் ஒவ்வோரடியிலமைத்துள்ள சொல்லையும் பொருளையுமே எடுத்துக்கொண்டு விரித்துக் கூறி விளக்குதலானும் இவரை இந்நூலுக்கு உரைகண்ட மதுரை யாசிரியராகிய நச்சினார்க்கினியர் (கலி. பக். 893) மிகுத்துப் புகழ்தலானும் இவருடைய பாடலைச் சிறந்த புலவர் பலரும் மிக மேலாக மதித்தனரென்பது தெற்றென விளங்கும்.