கணபதி துணை
முகவுரை.
சீரார் கலித்தொகைக்குச்
செவ்வன் குறிப்பெழுதி
நீரார் கலிசூழ் நிலத்தவர்க்குப் - பேரார்வ
முற்றளிக்க வேண்டுளமே 1 யோர்மருப்பன்
றாண்முதலைப்
பற்றளிக்கு மக்கற் பகம். |
கலித் தொகை யென்பது, சங்கச்
செய்யுட்களென்று தமிழ்மக்களால் நன்குமதித்துக்
கொண்டாடப்பெறும் கடைச்சங்ககாலத்துப் பனுவல்களுள்
ஒரு பிரிவாகிய எட்டுத்தொகையில் ஆறாவதென்பர்.
‘‘நற்றிணை
நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் 2 போற்றுங் கலியோ டகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை’’ |
என்னும் வெண்பாவின் வைப்பு முறை இதற்குக் காரணமாகும்.
இதனை மேற்கணக்கினுள் ஒன்றென்பர்
பன்னிரு பாட்டியலுடையார்; இசைப்பாட்டாகிய செந்துறை
மார்க்கத்த தென்பர் நச்சினார்க்கினியர்.
இது சொற்சுவை
பொருட்சுவைகளில் மிகச் சிறந்தது.
‘‘கற்றறிந்தார்
போற்றுங் கலி’’ -என்றும்
3‘‘திருத்தகு மாமுனிசிந் தாமணிகம்பன்
விருத்தக் கவிவளமும் வேண்டேம்-திருக்குறளோ
|
1. ஓர் மருப்பனென்றது,
திருவல்லிக்கேணிப் பெரியதெருவில் எழுந்தருளியிருக்கும்
கற்பக விநாயக மூர்த்தியை.
|
(பிரதிபேதம்)
2. ஏத்துங் கலியே யகம், கூறுங் கலியோடு,
சொல்லுங் கலியோடு.
|
3. முகவுரையில்
இக்குறியிடப்பெற்ற வெண்பாக்கள், சில ஏட்டுப்
பிரதிகளின் முன் உள்ளன. இவை வித்தியாபானு செந்தமிழென்னும்
பத்திரிகைகளிலும் சிலவேறுபாட்டோடு முன்பு
வெளிவந்துள்ளன. இவ்வெண்பாவொன்றும் சீவகசிந்தாமணியினிறுதியில்
‘‘திருத்தக்க மாமுனிசிந் தாமணி கம்பர்,
விருத்தக் கவித்திறமும் வேண்டே - முருத்தக்க,
கொங்குவேண் மாக்கதையைக் கூறேங் குறளணுகே, மெங்கெழிலென்
ஞாயிறெமக்கு’’ என மிக்க வேறுபாட்டோடு காணப்படுகிறது. |
|