நித்திலக் கோவை |
'வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி, |
|
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல் |
|
சிறு நனி ஆன்றிகம்' என்றி தோழி! |
|
நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம் |
|
5 |
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு, |
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன |
|
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து, |
|
ஊர் இஃது என்னாஅர், தீது இல் வாழ்க்கை, |
|
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி, |
|
10 |
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்வர, |
குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி |
|
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ, |
|
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக் |
|
களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை, |
|
15 |
வண்ண மார்பின் வன முலைத் துயல்வர, |
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக் |
|
குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப, |
|
கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும் |
|
தேரை ஒலியின் மாண, சீர் அமைத்து, |
|
20 |
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு |
பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென, |
|
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர், |
|
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த |
|
புன் தலை மன்றம் காணின், வழி நாள், |
|
25 |
அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்; |
அதுவே மருவினம், மாலை; அதனால், |
|
காதலர் செய்த காதல் |
|
நீடு இன்று மறத்தல் கூடுமோ, மற்றே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - அதியன் விண்ணத்தனார் | |
சிலம்பில் போகிய செம் முக வாழை |
|
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும், |
|
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் |
|
நல் வரை நாடனொடு அருவி ஆடியும், |
|
5 |
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும், |
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் |
|
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் |
|
அரிய போலும் காதல் அம் தோழி! |
|
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத |
|
10 |
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல், |
கிளி பட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என, |
|
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச் |
|
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை, |
|
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு, |
|
15 |
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே. |
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து, |
|
பேஎய் கண்ட கனவின், பல் மாண் |
|
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல், |
|
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன் |
|
5 |
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை |
மா இருங் கொல்லி உச்சித் தாஅய், |
|
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர் |
|
புலம் கந்தாக இரவலர் செலினே, |
|
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் |
|
10 |
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் |
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, |
|
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு |
|
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப் |
|
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு, |
|
15 |
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்! |
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன் |
|
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர் |
|
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து, |
|
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர் |
|
20 |
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே. |
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார் | |
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை, |
|
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல், |
|
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு |
|
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று, |
|
5 |
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, |
செய்து விட்டன்ன செந் நில மருங்கில், |
|
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை, |
|
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு, |
|
10 |
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, |
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ, |
|
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல் |
|
மணி மிடை பவளம் போல, அணி மிகக் |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
15 |
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, |
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை, |
|
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை |
|
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும் |
|
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என, |
|
20 |
நம் நோய் தன்வயின் அறியாள், |
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
பகலினும் அகலாதாகி, யாமம் |
|
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய, |
|
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு |
|
பனி மீக்கூரும் பைதல் பானாள், |
|
5 |
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை, |
பருகுவன்ன காதலொடு திருகி, |
|
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து, |
|
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ; |
|
அருளிலாளர் பொருள்வயின் அகல, |
|
10 |
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து |
யான் எவன் உளெனோ தோழி! தானே |
|
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய், |
|
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய, |
|
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக் |
|
15 |
கனை எரி பிறப்ப ஊதும் |
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே? |
|
பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் | |
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ! |
|
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய |
|
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ |
|
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட, |
|
5 |
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் |
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து, |
|
பழன யாமை பசு வெயில் கொள்ளும் |
|
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர! |
|
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட |
|
10 |
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி |
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த |
|
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி, |
|
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு |
|
ஊடினள் சிறு துனி செய்து எம் |
|
15 |
மணல் மலி மறுகின் இறந்திசினோளே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
'சிறு நுதல் பசந்து, பெருந் தோள் சாஅய், |
|
அகல் எழில் அல்குல் அவ் வரி வாட, |
|
பகலும் கங்குலும் மயங்கி, பையென, |
|
பெயல் உறு மலரின் கண் பனி வார, |
|
5 |
ஈங்கு இவள் உழக்கும்' என்னாது, வினை நயந்து, |
நீங்கல் ஒல்லுமோ ஐய! வேங்கை |
|
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை |
|
மையல் அம் கடாஅம் செருக்கி, மதம் சிறந்து, |
|
இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை, |
|
10 |
பெருங் கை எண்கினம் குரும்பி தேரும் |
புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில், |
|
கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து |
|
உடன் உறை பழமையின் துறத்தல்செல்லாது, |
|
இரும் புறாப் பெடையொடு பயிரும் |
|
15 |
பெருங் கல் வைப்பின் மலைமுதல் ஆறே? |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் | |
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் |
|
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல் |
|
ஆலி அழி துளி பொழிந்த வைகறை, |
|
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின், |
|
5 |
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ, |
கலம் சுடு புகையின் தோன்றும் நாட! |
|
இரவின் வருதல் எவனோ? பகல் வரின், |
|
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை |
|
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து, |
|
10 |
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி, |
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத் |
|
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய |
|
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட, |
|
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய |
|
15 |
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை, |
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே. |
|
இரவு வருவானைப் 'பகல் வருக' என்றது. - பிசிராந்தையார் | |
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி, |
|
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர், |
|
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென, |
|
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் |
|
5 |
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய், |
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை, |
|
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து |
|
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் |
|
காடு மிக நெடிய என்னார், கோடியர் |
|
10 |
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன் |
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு, |
|
நாம் செலின், எவனோ தோழி! காம்பின் |
|
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக் |
|
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது, |
|
15 |
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம் |
தண் பெரு படாஅர் வெரூஉம் |
|
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் | |
கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற |
|
நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும், |
|
தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து, |
|
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின், |
|
5 |
குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு |
இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும் |
|
தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட, |
|
காதலின் வளர்ந்த மாதர்ஆகலின், |
|
பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால், |
|
10 |
குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப! |
இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப் |
|
பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக் |
|
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க |
|
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த |
|
15 |
இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து |
உரும் இசைப் புணரி உடைதரும் |
|
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே. |
|
தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது. - நக்கீரனார் | |
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று, |
|
அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை, |
|
எழுதியன்ன திண் நிலைக் கதவம் |
|
கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென, |
|
5 |
திறந்து நப் புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர் |
இம்மை உலகத்து இல்' எனப் பல் நாள் |
|
பொம்மல் ஓதி நீவிய காதலொடு, |
|
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப, |
|
வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர் |
|
10 |
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி |
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் |
|
புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ் |
|
சுரம் இறந்து ஏகினும், நீடலர் |
|
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே. |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி, |
|
இரவின் வரூஉம் இடும்பை நீங்க, |
|
வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து, |
|
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம், |
|
5 |
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது, |
அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப் |
|
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக, |
|
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி! |
|
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து, |
|
10 |
இன் இசை முரசின் இரங்கி, ஒன்னார் |
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை, |
|
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த |
|
அடு புகழ் எஃகம் போல, |
|
கொடி பட மின்னிப் பாயின்றால், மழையே! |
|
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது; தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -மதுரை மருதன் இளநாகனார் | |
'இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!' என |
|
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம் |
|
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும், |
|
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க, |
|
5 |
ஐய ஆக வெய்ய உயிரா, |
இரவும் எல்லையும் படர் அட வருந்தி, |
|
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப, |
|
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய, |
|
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து, |
|
10 |
வருவர் வாழி, தோழி! பெரிய |
நிதியம் சொரிந்த நீவி போலப் |
|
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை, |
|
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர் |
|
வசி படு புண்ணின் குருதி மாந்தி, |
|
15 |
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல, |
இல் வழிப் படூஉம் காக்கைக் |
|
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
'நீலத்து அன்ன நீர் பொதி கருவின், |
|
மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின் |
|
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப, |
|
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப, |
|
5 |
மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின் |
திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள, |
|
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை, |
|
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி |
|
கல்லெனக் கறங்கு மணி இயம்ப, வல்லோன் |
|
10 |
வாச் செல வணக்கிய தாப் பரி நெடுந் தேர் |
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப, தீம் தொடைப் |
|
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப, |
|
இந் நிலை வாரார்ஆயின், தம் நிலை |
|
எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது' என, |
|
15 |
கடவுட் கற்பின் மடவோள் கூற, |
செய் வினை அழிந்த மையல் நெஞ்சின் |
|
துனி கொள் பருவரல் தீர, வந்தோய்! |
|
இனிது செய்தனையால்; வாழ்க, நின் கண்ணி! |
|
வேலி சுற்றிய வால் வீ முல்லைப் |
|
20 |
பெருந் தார் கமழும், விருந்து ஒலி, கதுப்பின் |
இன் நகை இளையோள் கவவ, |
|
மன்னுக, பெரும! நின் மலர்ந்த மார்பே! |
|
வினை முற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் | |
'கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும் |
|
சூழி மென் முகம் செப்புடன் எதிரின; |
|
பெண் துணை சான்றனள், இவள்' எனப் பல் மாண் |
|
கண் துணை ஆக நோக்கி, நெருநையும், |
|
5 |
அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும், |
அறியாமையின் செறியேன், யானே; |
|
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் |
|
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள், |
|
சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி, |
|
10 |
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக் |
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய், |
|
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப, |
|
வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென, |
|
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி, |
|
15 |
சேக்குவள் கொல்லோதானே தேக்கின் |
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை, |
|
ஊன் புழுக்கு அயரும் முன்றில், |
|
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே. |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - குடவாயில் கீரத்தனார் | |
'துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை, |
|
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு |
|
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து, |
|
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட, |
|
5 |
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து, |
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப் |
|
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் |
|
தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள், |
|
ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர, |
|
10 |
பரத்தைமை தாங்கலோ இலென்' என வறிது நீ |
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை! |
|
அது புலந்து உறைதல் வல்லியோரே, |
|
செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து, |
|
தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி, |
|
15 |
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப, |
வைகுநர் ஆகுதல் அறிந்தும், |
|
அறியார் அம்ம, அஃது உடலுமோரே! |
|
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது. -ஓரம்போகியார் | |
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, |
|
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி, |
|
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க, |
|
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று |
|
5 |
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் |
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன் |
|
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப, |
|
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி |
|
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல, |
|
10 |
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து |
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப, |
|
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி |
|
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும் |
|
ஆன் ஏமுற்ற காமர் வேனில், |
|
15 |
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் |
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப |
|
வருவேம்" என்ற பருவம் ஆண்டை |
|
இல்லைகொல்?' என மெல்ல நோக்கி, |
|
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு |
|
20 |
உள்ளிய மருங்கின் உள்ளம் போல, |
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து |
|
என்னுழியதுகொல் தானே பல் நாள் |
|
அன்னையும் அறிவுற அணங்கி, |
|
நல் நுதல் பாஅய பசலை நோயே? |
|
தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார் | |
கான மான் அதர் யானையும் வழங்கும்; |
|
வான மீமிசை உருமும் நனி உரறும்; |
|
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய; |
|
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி |
|
5 |
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம் |
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும், |
|
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட! |
|
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ |
|
இன்று தலையாக வாரல்; வரினே, |
|
10 |
ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய, |
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின் |
|
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை, |
|
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு |
|
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின் |
|
15 |
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே! |
இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது. - கபிலர் | |
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை |
|
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி, |
|
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் |
|
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர் |
|
5 |
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை, |
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென |
|
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை, |
|
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய |
|
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை, |
|
10 |
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின் |
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள் |
|
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத் |
|
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள், |
|
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள், |
|
15 |
'செல்வேம்' என்னும் நும் எதிர், |
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே! |
|
செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ, |
|
திமிலோன் தந்த கடுங் கண் வய மீன், |
|
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர், |
|
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும் |
|
5 |
கானல் அம் சிறுகுடி, பெரு நீர்ச் சேர்ப்ப! |
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் |
|
அலர் வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும், |
|
நெடுங் கழி துழைஇய குறுங் கால் அன்னம் |
|
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும், |
|
10 |
தடவு நிலைப் புன்னைத் தாது அணி, பெருந் துறை |
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் |
|
வண்டற் பாவை சிதைய வந்து, நீ |
|
தோள் புதிது உண்ட ஞான்றை, |
|
சூளும் பொய்யோ, கடல் அறி கரியே? |
|
பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
பசித்த யானைப் பழங்கண் அன்ன |
|
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி |
|
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, |
|
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு |
|
5 |
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது, |
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப் |
|
படு மணி இன நிரை உணீஇய, கோவலர் |
|
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல், |
|
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும் |
|
10 |
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர், |
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ? |
|
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு |
|
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ? |
|
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே! |
|
15 |
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ, |
யாய் அறிவுறுதல் அஞ்சி, |
|
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே. |
|
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் | |
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு, |
|
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்; |
|
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப, |
|
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர, |
|
5 |
பாம்பு எறி கோலின் தமியை வைகி, |
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக் |
|
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின், |
|
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன் |
|
10 |
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில், |
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக் |
|
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல், |
|
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப |
|
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை, |
|
15 |
புகல் அரும், பொதியில் போலப் |
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே! |
அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
இம்மென் பேர் அலர், இவ் ஊர், நம்வயின் |
|
செய்வோர் ஏச் சொல் வாட, காதலர் |
|
வருவர் என்பது வாய்வதாக, |
|
ஐய, செய்ய, மதன் இல, சிறிய நின் |
|
5 |
அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத் |
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி, |
|
காணிய வம்மோ? கற்பு மேம்படுவி! |
|
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து, |
|
யானைச் செல் இனம் கடுப்ப, வானத்து |
|
10 |
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய், பாம்பின் |
பை பட இடிக்கும் கடுங் குரல் ஏற்றொடு |
|
ஆலி அழி துளி தலைஇக் |
|
கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே! |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பறநாட்டுப் பெருங்கொற்றனார் | |
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத் |
|
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை |
|
தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த |
|
வளராப் பிள்ளைத் தூவி அன்ன, |
|
5 |
உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில் |
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும் |
|
துளி படு மொக்குள் துள்ளுவன சால, |
|
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய, |
|
வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய், |
|
10 |
சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த |
வண்டு உண் நறு வீ துமித்த நேமி |
|
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள், |
|
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக, |
|
செல்லும், நெடுந்தகை தேரே |
|
15 |
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே! |
வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர் மாசாத்தியார் | |
அம்ம! வாழி, தோழி! காதலர், |
|
'வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர், |
|
நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த |
|
களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும் |
|
5 |
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது |
இவண் உறைபு எவனோ? அளியள்!' என்று அருளி, |
|
'ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு கோள் |
|
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை, |
|
வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு, |
|
10 |
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம் |
வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய, |
|
தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல், |
|
ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்; |
|
சில் நாள் ஆன்றனைஆக' என, பல் நாள், |
|
15 |
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ, |
எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது, |
|
நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை, |
|
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை, |
|
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் |
|
20 |
சோலை அத்தம் மாலைப் போகி, |
ஒழியச் சென்றோர்மன்ற; |
|
பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே? |
|
கொண்டு நீங்கக் கருதி ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் | |
ஊரல் அவ் வாய் உருத்த தித்தி, |
|
பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு நுதல், |
|
நல்லள் அம்ம, குறுமகள் செல்வர் |
|
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், |
|
5 |
நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில், |
இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன |
|
நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து, |
|
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல் |
|
இழை அணி யானைச் சோழர் மறவன் |
|
10 |
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை, |
புனல் மலி புதவின், போஒர் கிழவோன், |
|
பழையன் ஓக்கிய வேல் போல், |
|
பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே! |
|
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர் | |
'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும், |
|
நன்பகல் அமையமும் இரவும் போல, |
|
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து, |
|
உள' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம் |
|
5 |
இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப, |
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே! |
|
நீ செல வலித்தனைஆயின், யாவதும் |
|
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர் |
|
ஆவி அவ் வரி நீர் என நசைஇ, |
|
10 |
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை, |
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் |
|
செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின் |
|
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின், |
|
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த, |
|
15 |
மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை |
பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச் |
|
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர், |
|
கோல் கழிபு இரங்கும் அதர, |
|
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே? |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது. - மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் | |
வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர் |
|
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு, |
|
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து, |
|
அரவின் பைந் தலை இடறி, பானாள் |
|
5 |
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி, |
துனி கண் அகல அளைஇ, கங்குலின் |
|
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல் |
|
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின், |
|
இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம் |
|
10 |
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு |
அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி |
|
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று, |
|
கழை தின் யாக்கை விழை களிறு தைவர, |
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் |
|
15 |
சாரல் நாடன் சாயல் மார்பே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் | |
பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து, |
|
ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து, |
|
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர் |
|
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர், |
|
5 |
படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர் |
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப் |
|
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து, |
|
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து, |
|
ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு, |
|
10 |
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருை |
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட |
|
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில், |
|
புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை, |
|
பனி படு சிமையப் பல் மலை இறந்தே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - உறையூர் முதுகூத்தனார் | |
கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும், |
|
வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும், |
|
இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும், |
|
தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர் |
|
5 |
அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு |
செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்! |
|
செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று, |
|
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம் |
|
எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும், |
|
10 |
காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ? |
உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே; |
|
குப்பை வெண் மணற் குவவுமிசையானும், |
|
எக்கர்த் தாழை மடல்வயினானும், |
|
ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு, |
|
15 |
சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த |
கடுஞ் செலல் கொடுந் திமில் போல, |
|
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே! |
|
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார் | |
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை, |
|
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ, |
|
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின் |
|
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் |
|
5 |
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர் |
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து, |
|
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும் |
|
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய, |
|
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும், |
|
10 |
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப் |
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி, |
|
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன், |
|
வேளிரொடு பொரீஇய, கழித்த |
|
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே! |
|
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
முளை வளர் முதல மூங்கில் முருக்கி, |
|
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை, |
|
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய, |
|
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக் |
|
5 |
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ, |
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி, |
|
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால் |
|
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து, |
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் |
|
10 |
நின் புரை தக்க சாயலன் என, நீ |
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் |
|
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு |
|
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் |
|
வண்டு இடைப் படாஅ முயக்கமும், |
|
15 |
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. -கபிலர் | |
'யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் |
|
ஆக மேனி அம் பசப்பு ஊர, |
|
அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின் |
|
பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு |
|
5 |
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின் |
எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள் |
|
வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி, |
|
நீடலர் வாழி, தோழி! கோடையில், |
|
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது, |
|
10 |
தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய, |
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து, |
|
யானைப் பெரு நிரை வானம் பயிரும் |
|
மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து, |
|
நாள் இடைப்படாமை வருவர், நமர்' என, |
|
15 |
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா |
நின் வாய் இன் மொழி நல் வாயாக |
|
வருவர் ஆயினோ நன்றே; வாராது, |
|
அவணர் காதலர்ஆயினும், இவண் நம் |
|
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல |
|
20 |
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி, |
மறுதரல் உள்ளத்தர்எனினும், |
|
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே. |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கல்லாடனார் | |
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய |
|
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க, |
|
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக! |
|
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு |
|
5 |
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து, |
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ, |
|
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் |
|
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி, |
|
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின் |
|
10 |
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப, |
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக் |
|
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது, |
|
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து, |
|
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப, |
|
15 |
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப் |
பொலிவன அமர்த்த உண்கண், |
|
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் கூத்தனார் | |
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் |
|
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல் |
|
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல் |
|
யானும் அறிவென்மன்னே; யானை தன் |
|
5 |
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து, |
இன்னா வேனில் இன் துணை ஆர, |
|
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட, |
|
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம் |
|
அரிய அல்லமன், நமக்கே விரி தார் |
|
10 |
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன் |
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ, |
|
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால், |
|
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த |
|
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின் |
|
15 |
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு, |
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய, |
|
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின், |
|
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ |
|
வார் உறு கவரியின் வண்டு உண விரிய, |
|
20 |
முத்தின் அன்ன வெள் வீ தாஅய், |
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி |
|
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப் |
|
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய் |
|
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று |
|
25 |
அமிழ்தம் ஊறும் செவ் வாய், |
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே! |
|
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார் | |
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் |
|
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த |
|
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய, |
|
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் |
|
5 |
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின், |
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர் |
|
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின் |
|
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க் |
|
காஞ்சி நீழல் குரவை அயரும் |
|
10 |
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் |
தேர் தர வந்த நேர் இழை மகளிர் |
|
ஏசுப என்ப, என் நலனே; அதுவே |
|
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் |
|
கொல் களிற்று யானை நல்கல்மாறே; |
|
15 |
தாமும் பிறரும் உளர்போல் சேறல் |
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின், |
|
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச் |
|
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, |
|
என்னொடு திரியானாயின், வென் வேல் |
|
20 |
மாரி அம்பின் மழைத் தோற் சோழர் |
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை, |
|
ஆரியர் படையின் உடைக, என் |
|
நேர் இறை முன்கை வீங்கிய வளையே! |
|
நயப் புப்பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பாவைக் கொட்டிலார் | |
'சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த |
|
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி, |
|
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய, |
|
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின் |
|
5 |
அவணது ஆக, பொருள்' என்று, உமணர் |
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை, |
|
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப் |
|
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி, |
|
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது |
|
10 |
பொன் ஆகுதலும் உண்டு' என, கொன்னே |
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர், |
|
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி, |
|
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர, |
|
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ, |
|
15 |
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை, |
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை, |
|
கள்ளி நீழல் கதறுபு வதிய, |
|
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை, |
|
எமியம் கழிதந்தோயே பனி இருள் |
|
20 |
பெருங் கலி வானம் தலைஇய |
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே! |
|
முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் |
|
மறம் கெழு தானை அரசருள்ளும், |
|
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர் |
|
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள், |
|
5 |
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன் |
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன், |
|
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல், |
|
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின், |
|
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற |
|
10 |
முயங்கல் இயையாதுஆயினும், என்றும், |
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக, |
|
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் |
|
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன் |
|
அகல் இருங் கானத்துக் கொல்லி போல, |
|
15 |
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின் |
அறாஅலியரோ, தூதே பொறாஅர் |
|
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள், |
|
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன், |
|
தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து, |
|
20 |
வழங்கல் ஆனாப் பெருந் துறை |
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே! |
|
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார் | |
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர் |
|
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில், |
|
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப் |
|
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப, |
|
5 |
அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட |
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து |
|
ஆண்மை வாங்க, காமம் தட்ப, |
|
கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய, |
|
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி, |
|
10 |
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்; |
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு |
|
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர் |
|
வாழ்தல் அன்ன காதல், |
|
சாதல் அன்ன பிரிவு அரியோளே! |
|
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - நரை முடி நெட்டையார் | |
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து, |
|
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி, |
|
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து, |
|
வலவன் வண் தேர் இயக்க, நீயும் |
|
5 |
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம |
'செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன் |
|
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள் |
|
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென, |
|
கழியே ஓதம் மல்கின்று; வழியே |
|
10 |
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்; |
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது' என, |
|
நின் திறத்து அவலம் வீட, இன்று இவண் |
|
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப! |
|
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத் |
|
15 |
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே; |
வடவர் தந்த வான் கேழ் வட்டம் |
|
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய |
|
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில் |
|
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர் |
|
20 |
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், |
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை |
|
தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு, |
|
முன்றில் தாழைத் தூங்கும் |
|
தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே? |
|
பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர் | |
உய் தகை இன்றால் தோழி! பைபய, |
|
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும் |
|
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்; |
|
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக் |
|
5 |
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள், |
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல், |
|
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு, |
|
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி, |
|
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப் |
|
10 |
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன், |
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும், |
|
யாணர் வேனில்மன், இது |
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே? |
|
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் | |
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை; |
|
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு யான் |
|
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது |
|
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை |
|
5 |
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் |
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன், |
|
ஏவல் இளையர் தலைவன், மேவார் |
|
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப் |
|
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை, |
|
10 |
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ |
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ் |
|
வரையரமகளிரின் அரியள், |
|
அவ் வரி அல்குல் அணையாக்காலே! |
|
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார் | |
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத் தோள், |
|
சில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை, |
|
நல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து, |
|
மரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப் |
|
5 |
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல் |
கண்ணி வாடிய மண்ணா மருங்குல், |
|
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ் |
|
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் |
|
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண், |
|
10 |
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை, |
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார், |
|
நெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப் |
|
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த |
|
பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி, |
|
15 |
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து நின்று |
உள்ளினை வாழி, என் நெஞ்சே! கள்ளின் |
|
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண், |
|
சில் மொழிப் பொலிந்த துவர் வாய், |
|
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே. |
|
தலைமகன் இடைச் சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது. -மதுரை மருதன் இளநாகனார் | |
வள மழை பொழிந்த வால் நிறக் களரி, |
|
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத் |
|
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின், |
|
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர் |
|
5 |
கை மாண் தோணி கடுப்ப, பையென, |
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம் |
|
எல் இடை உறாஅ அளவை, வல்லே, |
|
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க, |
|
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி |
|
10 |
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து, |
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ! |
|
பயப்புறு படர் அட வருந்திய |
|
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் | |
'விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி, |
|
தண் பதம் படுதல் செல்க!' எனப் பல் மாண் |
|
நாம் செல விழைந்தனமாக, 'ஓங்கு புகழ்க் |
|
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால், |
|
5 |
பல் படைப் புரவி எய்திய தொல் இசை |
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய |
|
இன மழை தவழும் ஏழிற் குன்றத்து, |
|
கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல் |
|
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் |
|
10 |
சில் நாள் கழிக!' என்று முன் நாள் |
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு |
|
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார், |
|
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப, |
|
உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய |
|
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த | |
கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச் |
|
செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப, |
|
காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு |
|
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் |
|
20 |
கல் கண் சீக்கும் அத்தம், |
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே! |
|
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
நகை நன்று அம்ம தானே இறை மிசை |
|
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன |
|
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல், |
|
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து, |
|
5 |
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் |
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை |
|
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து, |
|
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி, |
|
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை |
|
10 |
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப் |
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர! |
|
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் |
|
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி, |
|
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப, |
|
15 |
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி, |
எம் மனை வாராயாகி, முன் நாள், |
|
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக் |
|
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர், |
|
இழை அணி யானைப் பழையன் மாறன், |
|
20 |
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண், |
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த |
|
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய், |
|
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி, |
|
ஏதில் மன்னர் ஊர் கொள, |
|
25 |
கோதை மார்பன் உவகையின் பெரிதே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர் | |
தோளும் தொல் கவின் தொலைய, நாளும் |
|
நலம் கவர் பசலை நல்கின்று நலிய, |
|
சால் பெருந் தானைச் சேரலாதன் |
|
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய |
|
5 |
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன, |
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி |
|
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய, |
|
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே |
|
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது, |
|
10 |
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து, |
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி |
|
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ, |
|
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி |
|
கை தலை வைத்த மையல் விதுப்பொடு, |
|
15 |
கெடு மகப் பெண்டிரின் தேரும் |
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே! |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் | |
என் ஆவதுகொல் தானே முன்றில், |
|
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து, |
|
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி, |
|
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ, |
|
5 |
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல் |
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல் |
|
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் |
|
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர், |
|
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி, |
|
10 |
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி, |
'யானை வவ்வின தினை' என, நோனாது, |
|
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, |
|
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் |
|
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் | |
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை |
|
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய, |
|
எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன் |
|
தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி, |
|
5 |
உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே, |
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக, |
|
அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை |
|
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு, |
|
எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள, |
|
10 |
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை |
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன் |
|
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை |
|
கல் ஊர் பாம்பின் தோன்றும் |
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே? |
|
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப, |
|
எறி திரை ஓதம் தரல் ஆனாதே; |
|
துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் |
|
இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப, |
|
5 |
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே; |
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி |
|
வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது, |
|
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச் |
|
சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப! |
|
10 |
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, |
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர் |
|
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென, |
|
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும் |
|
குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண், |
|
15 |
உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே! |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - சேந்தன் கண்ணனார் | |
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி, |
|
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப, |
|
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு |
|
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் |
|
5 |
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற, |
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை, |
|
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில், |
|
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம், |
|
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய |
|
10 |
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி, |
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண் |
|
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத் தெறிப்ப, |
|
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி, |
|
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை, |
|
15 |
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என |
உள்ளுதொறு படூஉம் பல்லி, |
|
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே? |
|
பொருள் முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பொருந்தில் இளங்கீரனார் | |
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
|
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன், |
|
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின், |
|
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர் |
|
5 |
விழவு கொள் மூதூர் விறலி பின்றை |
முழவன் போல அகப்படத் தழீஇ, |
|
இன் துணைப் பயிரும் குன்ற நாடன் |
|
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்; |
|
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ |
|
10 |
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்; |
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ! |
|
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி, |
|
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல், |
|
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன் |
|
15 |
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும், |
புதுவது புனைந்த திறத்தினும், |
|
வதுவை நாளினும், இனியனால் எமக்கே. |
|
வரைந்து எய்திய பின்றை மண மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - அஞ்சியத்தை மகள் நாகையார் | |
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும், |
|
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும் |
|
கனவுக் கழிந்தனையவாகி, நனவின், |
|
நாளது செலவும், மூப்பினது வரவும், |
|
5 |
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும், |
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை |
|
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென |
|
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை |
|
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல, |
|
10 |
கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு, |
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி, |
|
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி, |
|
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து, |
|
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர, |
|
15 |
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து, |
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய |
|
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர், |
|
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத் |
|
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் |
|
20 |
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி, |
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை, |
|
நம்மொடு நன் மொழி நவிலும் |
|
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே? |
|
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள் முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் | |
மத வலி யானை மறலிய பாசறை, |
|
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப, |
|
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு |
|
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள, |
|
5 |
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து, |
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக் |
|
கடு நடைப் புரவி வழிவாய் ஓட, |
|
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர் |
|
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து, |
|
10 |
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய, |
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின், |
|
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட |
|
போது உறழ் கொண்ட உண்கண் |
|
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே? |
|
வினை முற்றிய தலைமகற்கு உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார் | |
மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும் |
|
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்; |
|
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை, |
|
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை |
|
5 |
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்; |
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர், |
|
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர் |
|
செழு மனை மறக்கும் செவ்வி வேனில் |
|
தானே வந்தன்றுஆயின், ஆனாது |
|
10 |
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் |
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி! |
|
'யாமே எமியம் ஆக, நீயே |
|
பொன் நயந்து அருள் இலையாகி, |
|
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே. |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார் | |
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை |
|
உகு வார் அருந்த, பகு வாய் யாமை |
|
கம்புள் இயவன் ஆக, விசி பிணித் |
|
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் |
|
5 |
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என் |
பொற் தொடி முன்கை பற்றினனாக, |
|
'அன்னாய்!' என்றனென்; அவன் கை விட்டனனே, |
|
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில் |
|
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய |
|
10 |
கற் போல் நாவினேனாகி, மற்று அது |
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க் |
|
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன் |
|
நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் |
|
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார் |
|
15 |
கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று, |
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது, |
|
கொன்றனன்ஆயினும் கொலை பழுது அன்றே |
|
அருவி ஆம்பல் கலித்த முன்துறை |
|
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன |
|
20 |
மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே? |
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக் கூறியது.-பரணர் | |
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த |
|
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த |
|
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய, |
|
தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி, |
|
5 |
வியல் அறை சிவப்ப வாங்கி, முணங்கு நிமிர்ந்து, |
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி |
|
பயில் இருங் கானத்து வழங்கல்செல்லாது, |
|
பெருங் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும், |
|
தீம் சுளைப் பலவின் தொழுதி, உம்பற் |
|
10 |
பெருங் காடு இறந்தனர்ஆயினும், யாழ நின் |
திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி, |
|
உள்ளாது அமைதலோ இலரே; நல்குவர் |
|
மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை |
|
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் |
|
15 |
காலொடு துயல்வந்தன்ன, நின் |
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின், |
|
காமர் பீலி, ஆய் மயில் தோகை |
|
இன் தீம் குரல துவன்றி, மென் சீர் |
|
ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி, |
|
5 |
கண் நேர் இதழ, தண் நறுங் குவளைக் |
குறுந் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை |
|
நீடு நீர் நெடுஞ் சுனை ஆயமொடு ஆடாய், |
|
உயங்கிய மனத்தையாகி, புலம்பு கொண்டு, |
|
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி, |
|
10 |
அன்னை வினவினள்ஆயின், அன்னோ! |
என் என உரைக்கோ யானே துன்னிய |
|
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி, |
|
ஓடை யானை உயர் மிசை எடுத்த |
|
ஆடு கொடி கடுப்ப, தோன்றும் |
|
15 |
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே? |
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
'பனி வார் உண்கணும், பசந்த தோளும், |
|
நனி பிறர் அறியச் சாஅய், நாளும், |
|
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார், |
|
நீடினர்மன்னோ, காதலர்' என நீ |
|
5 |
எவன் கையற்றனை? இகுளை! அவரே |
வானவரம்பன் வெளியத்து அன்ன நம் |
|
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது, |
|
அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர், |
|
பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு, |
|
10 |
வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை |
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும், |
|
பொய்யா நல் இசை மா வண் புல்லி, |
|
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள் |
|
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை |
|
15 |
அருவித் துவலையொடு மயங்கும் |
பெரு வரை அத்தம் இயங்கியோரே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.-மாமூலனார் | |
பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி, |
|
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன் |
|
குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித் |
|
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல் |
|
5 |
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப, |
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து |
|
உரு உடன் இயைந்த தோற்றம் போல, |
|
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ, |
|
வந்த மாலை பெயரின், மற்று இவள் |
|
10 |
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால், |
பாணி பிழையா மாண் வினைக் கலி மா |
|
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி, |
|
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக் |
|
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி, |
|
15 |
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப! |
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை |
|
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என |
|
நல் மலர் நறு வீ தாஅம் |
|
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே. |
|
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது. - மதுரைக் கண்ணத்தனார் | |
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண், |
|
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன, |
|
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண், |
|
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை |
|
5 |
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும், |
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து |
|
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என |
|
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய், |
|
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே! |
|
10 |
கரியாப் பூவின் பெரியோர் ஆர, |
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை |
|
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு, |
|
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று, |
|
சில் மொழி, அரிவை தோளே பல் மலை |
|
15 |
வெவ் அறை மருங்கின் வியன் சுரம், |
எவ்வம் கூர, இறந்தனம், யாமே. |
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத் |
|
தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே; |
|
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து, |
|
பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய, |
|
5 |
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு |
கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை |
|
எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி, |
|
நசை தர வந்த நன்னராளன் |
|
நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின், |
|
10 |
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே; |
எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச் |
|
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும், |
|
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின் |
|
இலங்கு வெள் அருவி போலவும், |
|
15 |
நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார் | |
நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ, |
|
அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று, |
|
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய, |
|
பொழுது கழி மலரின், புனையிழை! சாஅய், |
|
5 |
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப் |
புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங் காய் |
|
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப, |
|
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம் |
|
அத்தம் நண்ணி, அதர் பார்த்து இருந்த |
|
10 |
கொலை வெங் கொள்கைக் கொடுந் தொழில் மறவர் |
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த |
|
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய, |
|
வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல் |
|
கிளை தரு தெள் விளி கெழு முடைப் பயிரும் |
|
15 |
இன்னா வெஞ் சுரம் இறந்தோர், முன்னிய |
செய் வினை வலத்தர் ஆகி, இவண் நயந்து, |
|
எய்த வந்தனரே தோழி! மை எழில் |
|
துணை ஏர் எதிர் மலர் உண்கண் |
|
பிணை ஏர் நோக்கம் பெருங் கவின் கொளவே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் | |
மாதிரம் புதையப் பாஅய், கால் வீழ்த்து, |
|
ஏறுடைப் பெரு மழை பொழிந்தென, அவல்தோறு |
|
ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க, |
|
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன |
|
5 |
நீடு இணர்க் கொன்றை கவின் பெற, காடு உடன் |
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ, |
|
முல்லை இல்லமொடு மலர, கல்ல |
|
பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர, |
|
கார் தொடங்கின்றே காலை; காதலர் |
|
10 |
வெஞ் சின வேந்தன் வியன் பெரும் பாசறை, |
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்; |
|
யாது செய்வாம்கொல்? தோழி! நோதகக் |
|
கொலை குறித்தன்ன மாலை |
|
துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே! |
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் | |
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப, |
|
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு |
|
சினவல் போகிய புன்கண் மாலை, |
|
அத்த நடுகல் ஆள் என உதைத்த |
|
5 |
கான யானைக் கதுவாய் வள் உகிர், |
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண், |
|
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை, |
|
வருநர் இன்மையின் களையுநர்க் காணா |
|
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே |
|
10 |
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு |
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல் |
|
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண், |
|
பூதம் தந்த பொரி அரை வேங்கைத் |
|
தண் கமழ் புது மலர் நாறும் |
|
15 |
அம் சில் ஓதி ஆய் மடத் தகையே. |
தலைமகன் இடைச் சுரத்து நின்று சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார் | |
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய |
|
நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு அழித்து, |
|
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி, |
|
கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன் |
|
5 |
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின், |
இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர் |
|
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினைஇ, |
|
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி, |
|
இருஞ் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு, |
|
10 |
நரை மூதாளர் கை பிணி விடுத்து, |
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் |
|
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன, |
|
நலம் பெறு பணைத் தோள், நல் நுதல் அரிவையொடு, |
|
மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை |
|
15 |
நீ தற் பிழைத்தமை அறிந்து, |
கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே. |
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிய இடத்து,தோழி சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து, |
|
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து, |
|
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப, |
|
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய, |
|
5 |
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர், |
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின் |
|
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை, |
|
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை |
|
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர், |
|
10 |
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின், |
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன |
|
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும் |
|
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம |
|
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும் |
|
15 |
உயிர் குழைப்பன்ன சாயல், |
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - பரணர் | |
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம், |
|
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து, |
|
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும் |
|
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக |
|
5 |
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய |
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை, |
|
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன் |
|
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக் |
|
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில், |
|
10 |
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர் |
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி, |
|
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள் |
|
கழியாமையே வழிவழிப் பெருகி, |
|
அம் பணை விளைந்த தேக் கட் தேறல் |
|
15 |
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர், |
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர் |
|
மணி அரை யாத்து மறுகின் ஆடும் |
|
உள்ளி விழவின் அன்ன, |
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே? |
|
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை: |
|
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு, |
|
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க் |
|
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல் |
|
5 |
சேயிழை மகளிர் ஆயமும் அயரா; |
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக் |
|
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப் |
|
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர, |
|
இவை கண்டு, இனைவதன்தலையும், நினைவிலேன், |
|
10 |
கொடியோள் முன்னியது உணரேன், 'தொடியோய்! |
இன்று நின் ஒலி குரல் மண்ணல்' என்றதற்கு, |
|
எற் புலந்து அழிந்தனளாகி, தற் தகக் |
|
கடல்அம் தானை கை வண் சோழர், |
|
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன, |
|
15 |
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து, |
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல் |
|
ஓமை நீடிய உலவை நீள் இடை, |
|
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல், |
|
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின் |
|
20 |
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த |
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி, |
|
'சிறப்பும் சீரும் இன்றி, சீறூர் |
|
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை |
|
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் |
|
25 |
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ, |
மேயினள்கொல்?' என நோவல் யானே. |
|
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - நக்கீரர் | |
'வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ, |
|
இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று; |
|
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல், |
|
பகலே எம்மொடு ஆடி, இரவே, |
|
5 |
காயல் வேய்ந்த தேயா நல் இல் |
நோயொடு வைகுதிஆயின், நுந்தை |
|
அருங் கடிப் படுவலும்' என்றி; மற்று, 'நீ |
|
செல்லல்' என்றலும் ஆற்றாய்; 'செலினே, |
|
வாழலென்' என்றி, ஆயின்; ஞாழல் |
|
10 |
வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல் |
தண் அரும் பைந் தார் துயல்வர, அந்தி, |
|
கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு, |
|
நீயே கானல் ஒழிய, யானே |
|
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து, |
|
15 |
ஆடு மகள் போலப் பெயர்தல் |
ஆற்றேன்தெய்ய; அலர்க, இவ் ஊரே! |
|
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -அம்மூவனார் | |
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை, |
|
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர் |
|
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி, |
|
குறு நெடுந் துணைய மறி புடை ஆட, |
|
5 |
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை |
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, |
|
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது, |
|
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும், |
|
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம், |
|
10 |
எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து, |
என்னஆம் கொல் தாமே 'தெண் நீர் |
|
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்' என நசைஇ |
|
வீ தேர் பறவை விழையும் |
|
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே? |
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார் | |
அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப, |
|
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை, |
|
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண், |
|
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த |
|
5 |
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து, |
வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய், |
|
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல், |
|
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி, |
|
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி |
|
10 |
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் |
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும், |
|
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா, |
|
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி |
|
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர் |
|
15 |
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து, |
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே. |
|
அல்லகுறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர் எழுந்து, |
|
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து, |
|
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி, |
|
செது காழ் சாய்ந்த முது காற் பொதியில், |
|
5 |
அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று, |
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர, |
|
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப, |
|
தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு, |
|
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்; |
|
10 |
இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை, |
கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி, |
|
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா, |
|
ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து, |
|
பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி |
|
15 |
மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல் |
அண்ணல் யானை அடு போர் வேந்தர் |
|
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில் |
|
ஓர் எயில் மன்னன் போல, |
|
துயில் துறந்தனள்கொல்? அளியள் தானே! |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் | |
மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி, |
|
மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு, |
|
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ, |
|
போழ்ந்த போலப் பல உடன் மின்னி, |
|
5 |
தாழ்ந்த போல நனி அணி வந்து, |
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி, |
|
இடியும் முழக்கும் இன்றி, பாணர் |
|
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன |
|
இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல |
|
10 |
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை, |
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில், |
|
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி, |
|
மணி மண்டு பவளம் போல, காயா |
|
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய, |
|
15 |
கார் கவின் கொண்ட காமர் காலை, |
செல்க, தேரே நல் வலம் பெறுந! |
|
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின், | |
திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே! |
|
பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
'சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின் |
|
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை! |
|
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர் |
|
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும் |
|
5 |
கல்லா இளையர் கலித்த கவலை, |
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும் |
|
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல், |
|
அத்த எருவைச் சேவல் சேர்ந்த |
|
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல், |
|
10 |
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன் |
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி |
|
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார், |
|
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி, |
|
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி, |
|
15 |
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும், |
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர் |
|
நோய் இலர் பெயர்தல் அறியின், |
|
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - இடையன் சேந்தங் கொற்றனார் | |
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன் |
|
கல்லா யானை கடி புனல் கற்றென, |
|
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை, |
|
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, |
|
5 |
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, |
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை |
|
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, |
|
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று, |
|
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப, |
|
10 |
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, |
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ! |
|
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின் |
|
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின் |
|
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி, |
|
15 |
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய, |
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக் |
|
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன் |
|
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே! |
|
காதற்பரத்தை புலந்து சொல்லியது. - பரணர் | |
கோடை நீடலின், வாடு புலத்து உக்க |
|
சிறு புல் உணவு, நெறி பட மறுகி, |
|
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த |
|
வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர் |
|
5 |
பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர, |
கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து, |
|
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி, |
|
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய, |
|
வரி நிறச் சிதலை அரித்தலின், புல்லென்று, |
|
10 |
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் |
இன்னா ஒரு சிறைத் தங்கி, இன் நகைச் |
|
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி, |
|
வம்பலர் ஆகியும் கழிப மன்ற |
|
நசை தர வந்தோர் இரந்தவை |
|
15 |
இசை படப் பெய்தல் ஆற்றுவோரே! |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் | |
'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின், |
|
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள, |
|
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை |
|
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர, |
|
5 |
காமர் பீலி ஆய் மயில் தோகை |
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக் |
|
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல |
|
ஆடு கள வயிரின் இனிய ஆலி, |
|
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, |
|
10 |
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் |
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும், |
|
உடன்ற அன்னை அமரா நோக்கமும், |
|
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச் |
|
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு |
|
15 |
குட கடல் சேரும் படர் கூர் மாலையும், |
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, |
|
யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி! |
|
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர் |
|
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு |
|
20 |
அள் இலைப் பலவின் கனி கவர் கைய |
கல்லா மந்தி கடுவனோடு உகளும் |
|
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து, |
|
பாடு இன் அருவி சூடி, |
|
வான் தோய் சிமையம் தோன்றலானே. |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -காவட்டனார் | |
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய, |
|
தெருளாமையின் தீதொடு கெழீஇ, |
|
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து, |
|
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே! |
|
5 |
நினையினைஆயின், எனவ கேண்மதி! |
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை, |
|
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி, |
|
நனவின் இயன்றதுஆயினும், கங்குல் |
|
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால், |
|
10 |
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி, |
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி |
|
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப, |
|
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு, |
|
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி, |
|
15 |
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின் |
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின் |
|
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி, |
|
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு |
|
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு, |
|
20 |
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல், |
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள் |
|
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர, |
|
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று, |
|
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப் |
|
25 |
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த |
நிரம்பா நீள் இடைத் தூங்கி, |
|
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே? |
|
முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, 'நும் |
|
ஊர் யாது?' என்ன, நணி நணி ஒதுங்கி, |
|
முன் நாள் போகிய துறைவன், நெருநை, |
|
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த |
|
5 |
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன், |
தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம் |
|
அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என, |
|
நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே; |
|
உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்; |
|
10 |
நாம் எதிர் கொள்ளாம்ஆயின், தான் அது |
துணிகுவன் போலாம்; நாணு மிக உடையன்; |
|
வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ? |
|
அம்ம, தோழி! கூறுமதி நீயே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல் |
|
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப, |
|
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும் |
|
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப, |
|
5 |
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் |
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை, |
|
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர் |
|
வில் சினம் தணிந்த வெருவரு கவலை, |
|
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை |
|
10 |
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி, |
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து, |
|
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும் |
|
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார் |
|
முனை அரண் கடந்த வினை வல் தானை, |
|
15 |
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய |
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல, |
|
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து, |
|
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண, |
|
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை |
|
20 |
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன் |
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே! |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை இளங்கௌசிகனார் | |
'பிறர் உறு விழுமம் பிறரும் நோப; |
|
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்; |
|
கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி, |
|
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் |
|
5 |
காடு கெழு நெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப, |
தூங்குதல் புரிந்தனர், நமர்' என, ஆங்கு அவற்கு |
|
அறியக் கூறல் வேண்டும் தோழி! |
|
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி |
|
10 |
செழுங் கோட் பலவின் பழம் புணையாக, |
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் |
|
வறன் உறல் அறியாச் சோலை, |
|
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே! |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - கபிலர் | |
தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள், |
|
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ, |
|
காடும் கானமும் அவனொடு துணிந்து, |
|
நாடும் தேயமும் நனி பல இறந்த |
|
5 |
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என, |
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும், |
|
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த |
|
அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய, |
|
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக் |
|
10 |
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு, |
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி, |
|
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும், |
|
ஆர நீர் ஊட்டிப் புரப்போர் |
|
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே! |
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் | |
'இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென, |
|
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும் |
|
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த |
|
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய், |
|
5 |
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில், |
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண், |
|
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ, |
|
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே; |
|
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ? |
|
10 |
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ? |
உரைமதி வாழியோ, வலவ!' என, தன் |
|
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி, |
|
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை; |
|
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே. |
|
வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, உழையர் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தியார் | |
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல் |
|
என் ஓரன்ன தாயரும், காண, |
|
கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர் |
|
காவிரிப் படப்பை உறந்தை அன்ன |
|
5 |
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர, |
நல் மாண் விழவில் தகரம் மண்ணி, |
|
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு |
|
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன், |
|
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் |
|
10 |
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ, |
வளையுடை முன்கை அளைஇ, கிளைய |
|
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை |
|
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல் |
|
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும், |
|
15 |
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி, |
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச் |
|
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ, |
|
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே. |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து |
|
வாளை நாள் இரை தேரும் ஊர! |
|
நாணினென், பெரும! யானே பாணன் |
|
மல் அடு மார்பின் வலி உற வருந்தி, |
|
5 |
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் |
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த |
|
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க் |
|
கணையன் நாணியாங்கு மறையினள் |
|
மெல்ல வந்து, நல்ல கூறி, |
|
10 |
'மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின் |
சேரியேனே; அயல் இலாட்டியேன்; |
|
நுங்கை ஆகுவென் நினக்கு' என, தன் கைத் |
|
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர, |
|
நுதலும் கூந்தலும் நீவி, |
|
15 |
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே. |
தோழி வாயில் மறுத்தது; தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர் | |
திருந்துஇழை நெகிழ்ந்து, பெருந் தோள் சாஅய், |
|
அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர்! | |
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ |
|
பூக் கண் பறைந்த புன் தலைச் சிறாஅரொடு |
|
5 |
அவ் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப் |
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய |
|
பூந் துகில் இமைக்கும், பொலன் காழ் அல்குல், |
|
அவ் வரி சிதைய நோக்கி, வெவ் வினைப் |
|
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ, |
|
10 |
வரிப் புற இதலின் மணிக் கட் பேடை |
நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முட் |
|
செங் கால், சேவல் பயிரும் ஆங்கண், |
|
வில் ஈண்டு அருஞ் சமம் ததைய நூறி, |
|
நல் இசை நிறுத்த நாணுடை மறவர் |
|
15 |
நிரை நிலை நடுகல் பொருந்தி, இமையாது, |
இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி |
|
சிறிய தெற்றுவதுஆயின், 'பெரிய |
|
ஓடை யானை உயர்ந்தோர்ஆயினும், |
|
நின்றாங்குப் பெயரும் கானம் |
|
20 |
சென்றோர்மன்' என இருக்கிற்போர்க்கே. |
தலைமகளது குறிப்பு அறிந்து, தோழி தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
அம்ம வாழி, தோழி நம் மலை |
|
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின், |
|
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத |
|
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல் |
|
5 |
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி, |
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ |
|
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து, |
|
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி |
|
இன் இசை ஓரா இருந்தனமாக, |
|
10 |
'மை ஈர் ஓதி மட நல்லீரே! |
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து, |
|
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் |
|
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என, |
|
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட, |
|
15 |
சொல்லிக் கழிந்த வல் விற் காளை |
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து, |
|
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள், |
|
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என, |
|
அன்னை தந்த முது வாய் வேலன், |
|
20 |
'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்; |
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின், |
|
வினவின் எவனோ மற்றே 'கனல் சின |
|
மையல் வேழ மெய் உளம்போக, |
|
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு |
|
25 |
காட்டு மான் அடி வழி ஒற்றி, |
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே? |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார் | |
அறியாய் வாழி, தோழி! நெறி குரல் |
|
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து, |
|
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும், |
|
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட |
|
5 |
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும், |
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு |
|
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும், |
|
எற் புறந்தந்து, நிற் பாராட்டி, |
|
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார், |
|
10 |
மனைவயின் இருப்பவர்மன்னே துனைதந்து, |
இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர் |
|
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும் |
|
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர் |
|
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட, |
|
15 |
நல் இசை தம் வயின் நிறுமார், வல் வேல் |
வான வரம்பன் நல் நாட்டு உம்பர், |
|
வேனில் நீடிய வெங் கடற்று அடை முதல், |
|
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற, |
|
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும் |
|
20 |
பெருங் களிறு தொலைச்சிய இருங் கேழ் ஏற்றை |
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி, |
|
வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப, |
|
படு மழை உருமின் முழங்கும் |
|
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரனார் | |
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி, |
|
அதர் படு பூழிய சேண் புலம் படரும் |
|
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக் |
|
கண நிரை வாழ்க்கைதான் நன்றுகொல்லோ? |
|
5 |
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள, |
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த |
பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி, |
|
' ''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்! |
|
கொள்ளீரோ'' எனச் சேரிதொறும் நுவலும், |
|
10 |
அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின் |
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்' என, |
|
சிறிய விலங்கினமாக, பெரிய தன் |
|
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி, |
|
'யாரீரோ, எம் விலங்கியீஇர்?' என, |
|
15 |
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற |
சில் நிரை வால் வளைப் பொலிந்த |
|
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே! |
|
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - அம்மூவனார் | |
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன |
|
வரி மென் முகைய நுண் கொடி அதிரல் |
|
மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர் |
|
விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர் |
|
5 |
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி, |
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் |
|
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப் |
|
பழ அணி உள்ளப்படுமால் தோழி! |
|
இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி |
|
10 |
படாஅவாகும், எம் கண்ணே கடாஅ |
வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன் |
|
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை |
|
குன்று புகு பாம்பின் தோன்றும், |
|
என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே! |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் | |
தாழ் பெருந் தடக் கை தலைஇய, கானத்து, |
|
வீழ் பிடி கெடுத்த, வெண் கோட்டு யானை |
|
உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன, |
|
பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ, |
|
5 |
பின்னிலை முனியானாகி, 'நன்றும், |
தாது செய் பாவை அன்ன தையல், |
|
மாதர் மெல் இயல், மட நல்லோள்வயின் |
|
தீது இன்றாக, நீ புணை புகுக!' என |
|
என்னும் தண்டும்ஆயின், மற்று அவன் |
|
10 |
அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே |
ஒல் இனி, வாழி, தோழி! கல்லெனக் |
|
கண மழை பொழிந்த கான் படி இரவில், |
|
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட, |
|
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த |
|
15 |
வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென, |
மறப் புலி உரற, வாரணம் கதற, |
|
நனவுறு கட்சியின் நல் மயில் ஆல, |
|
மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன் |
|
பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று, |
|
20 |
உரிதுஅல் பண்பின் பிரியுனன்ஆயின், |
வினை தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன் |
|
முனைகொல் தானையொடு முன் வந்து இறுப்ப, |
|
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை |
|
ஆற்றாமையின், பிடித்த வேல் வலித் |
|
25 |
தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற, |
விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின் |
|
கான் அமர் நன்னன் போல, |
|
யான் ஆகுவல், நின் நலம் தருவேனே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மோசிகீரனார் | |
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி, |
|
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து |
|
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய, |
|
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக் |
|
5 |
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி, |
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை |
|
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ, |
|
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர் |
|
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப, |
|
10 |
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் |
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி, |
|
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை, |
|
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா, |
|
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி, |
|
15 |
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின், |
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம், |
|
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும் |
|
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி |
|
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர், |
|
20 |
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர் |
நீடலர் வாழி, தோழி! தோடு கொள் |
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப, |
|
தகரம் மண்ணிய தண் நறு முச்சி, |
|
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ் |
|
25 |
வேனில் அதிரல் வேய்ந்த நின் |
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | |
களவும் புளித்தன; விளவும் பழுநின; |
|
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர், |
|
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு, |
|
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து |
|
5 |
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு |
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக, |
|
இளையர் அருந்த, பின்றை, நீயும் |
|
இடு முள் வேலி முடக் கால் பந்தர், |
|
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில், |
|
10 |
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர, |
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள், |
|
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ |
|
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் |
|
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல் |
|
15 |
மன்ற இரும் புதல் ஒளிக்கும் |
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே. |
|
இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார் | |
தண் கயம் பயந்த வண் காற் குவளை |
|
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன, |
|
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண் |
|
பனி வார் எவ்வம் தீர, இனி வரின், |
|
5 |
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர் |
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை |
|
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின், |
|
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை, |
|
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி, |
|
10 |
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு, |
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல் |
|
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும், |
|
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து, |
|
ஆடு கழை இரு வெதிர் நரலும் |
|
15 |
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே! |
பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித் தேர்ப் |
|
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென, |
|
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண், |
|
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன் |
|
5 |
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி, |
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது; |
|
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி, |
|
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து, |
|
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின் |
|
10 |
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே; |
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி, |
|
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய, |
|
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ, |
|
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின் |
|
15 |
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ, |
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத் |
|
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து, |
|
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன் |
|
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே! |
|
காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது. - பரணர் | |
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட, |
|
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப, |
|
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், |
|
மணன் இடையாகக் கொள்ளான், 'கல் பகக் |
|
5 |
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் |
எளியவாக, ஏந்து கொடி பரந்த |
|
பொறி வரி அல்குல் மாஅயோட்கு' எனத் |
|
தணிந்த பருவம் செல்லான், படர்தரத் |
|
துணிந்தோன்மன்ற துனை வெங் காளை |
|
10 |
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி, |
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப் |
|
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து, |
|
கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும் |
|
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங் கோட்டுக் |
|
15 |
கோடை வெவ் வளிக்கு உலமரும் |
புல் இலை வெதிர நெல் விளை காடே. |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர, |
|
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ, |
|
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை |
|
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய |
|
5 |
பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து, |
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான், |
|
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று, |
|
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க, |
|
நன்று புறமாறி அகறல், யாழ நின் |
|
10 |
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ? |
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி, |
|
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப் |
|
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி, |
|
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி, |
|
15 |
நயன் அறத் துறத்தல் வல்லியோரே, |
நொதுமலாளர்; அது கண்ணோடாது, |
|
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ, |
|
மாரி புறந்தர நந்தி, ஆரியர் |
|
பொன் படு நெடு வரை புரையும் எந்தை |
|
20 |
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண் |
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ? |
|
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து, |
|
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை |
|
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர் |
|
25 |
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே! |
காமம் மிக்க கழி படர் கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து, சொல்லியது. -இம்மென்கீரனார் | |
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி, |
|
இமையக் கானம் நாறும் கூந்தல், |
|
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம் |
|
பருகுவன்ன காதல் உள்ளமொடு, |
|
5 |
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார் |
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த |
|
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட, |
|
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை |
|
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி, |
|
10 |
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ, |
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் |
|
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள் விளி, |
|
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப் |
|
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி, |
|
15 |
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், |
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல், |
|
வேய் கண் உடைந்த சிமைய, |
|
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
நகை நன்று அம்ம தானே 'அவனொடு, |
|
மனை இறந்து அல்கினும் அலர், என நயந்து, |
|
கானல் அல்கிய நம் களவு அகல, |
|
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை, |
|
5 |
நூல் அமை பிறப்பின், நீல உத்தி, |
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி, |
|
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை |
|
நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந் தினைக் |
|
குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, நல் நான்கு |
|
10 |
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ, |
பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி, |
|
மதியுடை வலவன் ஏவலின், இகு துறைப் |
|
புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர்க் |
|
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி, |
|
15 |
பால் கண்டன்ன ஊதை வெண் மணல், |
கால் கண்டன்ன வழி படப் போகி, |
|
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண், |
|
இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி, துறை கெழு |
|
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை, |
|
20 |
பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு, |
நேமி தந்த நெடுநீர் நெய்தல் |
|
விளையா இளங் கள் நாற, பலவுடன் |
|
பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும் |
|
புதுவது ஆகின்று அம்ம பழ விறல், |
|
25 |
பாடு எழுந்து இரங்கு முந்நீர், |
நீடு இரும் பெண்ணை, நம் அழுங்கல் ஊரே! |
|
தலைமகன் வரைந்து எய்திய பின்றை, தோழி தலைமகட்குச் சொல்லியது. -உலோச்சனார் | |
மேல் |