அம்மூவனார் |
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய, |
|
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த, |
|
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை, |
|
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப! |
|
5 |
நெய்தல் உண்கண் பைதல கலுழ, |
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும் |
|
அரிது உற்றனையால் பெரும! உரிதினின் |
|
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு |
|
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப் |
|
10 |
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் |
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி, |
|
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும் |
|
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே. |
|
இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார் | |
உரை |
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் |
|
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த |
|
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, |
|
என்றூழ் விடர குன்றம் போகும் |
|
5 |
கதழ் கோல் உமணர் காதல் மடமகள் |
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி, |
|
'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச் |
|
சேரி விலைமாறு கூறலின், மனைய |
|
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய |
|
10 |
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு, |
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும் |
|
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு |
|
எவ்வம் தீர வாங்கும் தந்தை |
|
கை பூண் பகட்டின் வருந்தி, |
|
15 |
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே. |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார் | |
உரை |
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப் |
|
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள், |
|
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி |
|
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள், |
|
5 |
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும், |
பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து, |
|
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு |
|
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும், |
|
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும், |
|
10 |
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின், |
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக் |
|
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த் |
|
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும் |
|
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே? |
|
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், - அம்மூவனார் | |
உரை |
'வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ, |
|
இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று; |
|
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல், |
|
பகலே எம்மொடு ஆடி, இரவே, |
|
5 |
காயல் வேய்ந்த தேயா நல் இல் |
நோயொடு வைகுதிஆயின், நுந்தை |
|
அருங் கடிப் படுவலும்' என்றி; மற்று, 'நீ |
|
செல்லல்' என்றலும் ஆற்றாய்; 'செலினே, |
|
வாழலென்' என்றி, ஆயின்; ஞாழல் |
|
10 |
வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல் |
தண் அரும் பைந் தார் துயல்வர, அந்தி, |
|
கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு, |
|
நீயே கானல் ஒழிய, யானே |
|
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து, |
|
15 |
ஆடு மகள் போலப் பெயர்தல் |
ஆற்றேன்தெய்ய; அலர்க, இவ் ஊரே! |
|
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -அம்மூவனார் | |
உரை |
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி, |
|
அதர் படு பூழிய சேண் புலம் படரும் |
|
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக் |
|
கண நிரை வாழ்க்கைதான் நன்றுகொல்லோ? |
|
5 |
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள, |
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த |
|
பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி, |
|
' ''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்! |
|
கொள்ளீரோ'' எனச் சேரிதொறும் நுவலும், |
|
10 |
அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின் |
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்' என, |
|
சிறிய விலங்கினமாக, பெரிய தன் |
|
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி, |
|
'யாரீரோ, எம் விலங்கியீஇர்?' என, |
|
15 |
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற |
சில் நிரை வால் வளைப் பொலிந்த |
|
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே! |
|
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - அம்மூவனார் | |
உரை |
மேல் |