| முகப்பு | தொடக்கம் | 
| 
உறையூர் இளம்பொன் வாணிகனார் | 
| 
 264 | 
| 
பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி, | |
| 
மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணியொடு, | |
| 
அணி மயில் பீலி சூட்டி, பெயர் பொறித்து, | |
| 
இனி நட்டனரே, கல்லும்; கன்றொடு | |
| 
5 | 
கறவை தந்து பகைவர் ஓட்டிய | 
| 
நெடுந்தகை கழிந்தமை அறியாது, | |
| 
இன்றும் வரும்கொல், பாணரது கடும்பே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
....................உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.
 |