| முகப்பு | தொடக்கம் | 
| 
உறையூர் மருத்துவன் தாமோதரனார் | 
| 
 60 | 
| 
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல, | |
| 
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் | |
| 
உச்சி நின்ற உவவு மதி கண்டு, | |
| 
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த, | |
| 
5 | 
சில் வளை விறலியும், யானும், வல் விரைந்து, | 
| 
தொழுதனெம் அல்லமோ, பலவே கானல் | |
| 
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் | |
| 
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் | |
| 
உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன், | |
| 
10 | 
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன், | 
| 
வெயில் மறைக் கொண்ட உரு கெழு சிறப்பின் | |
| 
மாலை வெண் குடை ஒக்குமால் எனவே? | |
| 
திணை அது; துறை குடை மங்கலம்.
 | |
| 
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
 | 
| 
 170 | 
| 
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி, | |
| 
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர், | |
| 
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி | |
| 
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென, | |
| 
5 | 
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப, | 
| 
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி | |
| 
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும் | |
| 
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன், | |
| 
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே | |
| 
10 | 
சிறு கண் யானை வெண் கோடு பயந்த | 
| 
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து, | |
| 
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல் | |
| 
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி, | |
| 
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு | |
| 
15 | 
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன் | 
| 
விசைத்து எறி கூடமொடு பொரூஉம் | |
| 
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே. | |
| 
திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
 | |
| 
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
 | 
| 
 321 | 
| 
பொறிப் புறப் பூழின் போர் வல் சேவல் | |
| 
மேந் தோல் களைந்த தீம் கோள் வெள் எள் | |
| 
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு, உடன் | |
| 
வேனில் கோங்கின் பூம் பொகுட்டு அன்ன | |
| 
5 | 
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட, | 
| 
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும், | |
| 
வன் புல வைப்பினதுவே சென்று | |
| 
தின் பழம் பசீஇ ..........னனோ, பாண! | |
| 
வாள் வடு விளங்கிய சென்னிச் | |
| 
10 | 
செரு வெங் குருசில் ஓம்பும் ஊரே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
 |