| முகப்பு | தொடக்கம் | 
| 
உறையூர் முது கூத்தனார் | 
| 
 331 | 
| 
கல் அறுத்து இயற்றிய வல் உவர்க் கூவல், | |
| 
வில் ஏர் வாழ்க்கை, சீறூர் மதவலி | |
| 
நனி நல்கூர்ந்தனன்ஆயினும், பனி மிக, | |
| 
புல்லென் மாலைச் சிறு தீ ஞெலியும் | |
| 
5 | 
கல்லா இடையன் போல, குறிப்பின் | 
| 
இல்லது படைக்கவும் வல்லன்; உள்ளது | |
| 
தவச் சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள், | |
| 
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் | |
| 
இல் பொலி மகடூஉப் போல, சிற் சில | |
| 
10 | 
வரிசையின் அளிக்கவும் வல்லன்; உரிதினின் | 
| 
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும் | |
| 
போகு பலி வெண் சோறு போலத் | |
| 
தூவவும் வல்லன், அவன் தூவுங்காலே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
உறையூர் முது கூத்தனார் பாடியது.
 |