| முகப்பு | தொடக்கம் | 
| 
எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | 
| 
 397 | 
| 
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும்; புள்ளும் | |
| 
உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே; | |
| 
பொய்கையும் போது கண் விழித்தன; பைபயச் | |
| 
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடு எழுந்து | |
| 
5 | 
இரங்குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப, | 
| 
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி, | |
| 
எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை, | |
| 
வைகறை அரவம் கேளியர்! 'பல கோள் | |
| 
செய் தார் மார்ப! எழுமதி துயில்' என, | |
| 
10 | 
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, | 
| 
நெடுங் கடைத் தோன்றியேனே; அது நயந்து, | |
| 
'உள்ளி வந்த பரிசிலன் இவன்' என, | |
| 
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ் சூடு, | |
| 
மணிக் கலன் நிறைந்த மணம் நாறு தேறல், | |
| 
15 | 
பாம்பு உரித்தன்ன வான் பூங் கலிங்கமொடு, | 
| 
மாரி அன்ன வண்மையின் சொரிந்து, | |
| 
வேனில் அன்ன என் வெப்பு நீங்க, | |
| 
அருங் கலம் நல்கியோனே; என்றும், | |
| 
செறுவில் பூத்த சேயிதழ்த் தாமரை, | |
| 
20 | 
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த | 
| 
தீயொடு விளங்கும் நாடன், வாய் வாள் | |
| 
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்; | |
| 
எறி திரைப் பெருங் கடல் இறுதிக்கண் செலினும், | |
| 
தெறு கதிர்க் கனலி தென் திசைத் தோன்றினும், | |
| 
25 | 
'என்?' என்று அஞ்சலம், யாமே; வென் வேல் | 
| 
அருஞ் சமம் கடக்கும் ஆற்றல் அவன் | |
| 
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே. | |
| 
திணை அது; துறை பரிசில்விடை; கடைநிலை விடையும் ஆம்.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது.
 |