| முகப்பு | தொடக்கம் | 
| 
எருமைவெளியனார் | 
| 
 273 | 
| 
மா வாராதே; மா வாராதே; | |
| 
எல்லார் மாவும் வந்தன; எம் இல், | |
| 
புல் உளைக் குடுமிப் புதல்வற் தந்த | |
| 
செல்வன் ஊரும் மா வாராதே | |
| 
5 | 
இரு பேர் யாற்ற ஒரு பெருங் கூடல் | 
| 
விலங்கிடு பெரு மரம் போல, | |
| 
உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே? | |
| 
திணை தும்பை; துறை குதிரை மறம்.
 | |
| 
எருமை வெளியனார் பாடியது.
 | 
| 
 303 | 
| 
நிலம் பிறக்கிடுவது போலக் குளம்பு குடையூஉ, | |
| 
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல் | |
| 
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த | |
| 
வெந் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப | |
| 
5 | 
ஆட்டிக் காணிய வருமே நெருநை, | 
| 
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர், | |
| 
கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர் | |
| 
கயந்தலை மடப் பிடி புலம்ப, | |
| 
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
எருமை வெளியனார் பாடியது.
 |