| முகப்பு | தொடக்கம் | 
| 
கண்ணகனார் | 
| 
 218 | 
| 
பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய | |
| 
மா மலை பயந்த காமரு மணியும், | |
| 
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து, | |
| 
அரு விலை நன் கலம் அமைக்கும்காலை, | |
| 
5 | 
ஒரு வழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர் | 
| 
சான்றோர் பாலர் ஆப; | |
| 
சாலார் சாலார் பாலர் ஆகுபவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது.
 |