| முகப்பு | தொடக்கம் | 
| 
கருங்குழலாதனார் | 
| 
 7 | 
| 
களிறு கடைஇய தாள், | |
| 
கழல் உரீஇய திருந்து அடி, | |
| 
கணை பொருது கவி வண் கையால், | |
| 
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து, | |
| 
5 | 
மா மறுத்த மலர் மார்பின், | 
| 
தோல் பெயரிய எறுழ் முன்பின், | |
| 
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர் | |
| 
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக் | |
| 
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல | |
| 
10 | 
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ! | 
| 
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து | |
| 
மீனின் செறுக்கும் யாணர்ப் | |
| 
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே. | |
| 
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை; மழபுல வஞ்சியும் ஆம்.
 | |
| 
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
 | 
| 
 224 | 
| 
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்; | |
| 
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி, | |
| 
இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்; | |
| 
அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து, | |
| 
5 | 
முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த | 
| 
தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு, | |
| 
பருதி உருவின் பல் படைப் புரிசை, | |
| 
எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண், | |
| 
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்; | |
| 
10 | 
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்: | 
| 
இறந்தோன் தானே; அளித்து இவ் உலகம்! | |
| 
அருவி மாறி, அஞ்சு வரக் கருகி, | |
| 
பெரு வறங் கூர்ந்த வேனில் காலை, | |
| 
பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார், | |
| 
15 | 
பூ வாள் கோவலர் பூவுடன் உதிரக் | 
| 
கொய்து கட்டு அழித்த வேங்கையின், | |
| 
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
 |