| முகப்பு | தொடக்கம் | 
| 
காக்கை பாடினியார் நச்செள்ளையார் | 
| 
 278 | 
| 
'நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள், | |
| 
முளரி மருங்கின், முதியோள் சிறுவன் | |
| 
படை அழிந்து, மாறினன்' என்று பலர் கூற, | |
| 
'மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என் | |
| 
5 | 
முலை அறுத்திடுவென், யான்' எனச் சினைஇ, | 
| 
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா, | |
| 
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய | |
| 
படு மகன் கிடக்கை காணூஉ, | |
| 
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது.
 |