| முகப்பு | தொடக்கம் | 
| 
குட்டுவன் கீரனார் | 
| 
 240 | 
| 
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், | |
| 
வாடா யாணர் நாடும் ஊரும், | |
| 
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் | |
| 
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு, | |
| 
5 | 
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, | 
| 
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ, | |
| 
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை, | |
| 
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும் | |
| 
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி, | |
| 
10 | 
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது; | 
| 
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது, | |
| 
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் | |
| 
வாடிய பசியராகி, பிறர் | |
| 
நாடு படு செலவினர் ஆயினர், இனியே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.
 |