| முகப்பு | தொடக்கம் | 
| 
கூடலூர் கிழார் | 
| 
 229 | 
| 
ஆடு இயல் அழல் குட்டத்து | |
| 
ஆர் இருள் அரை இரவில், | |
| 
முடப் பனையத்து வேர் முதலாக் | |
| 
கடைக் குளத்துக் கயம் காய, | |
| 
5 | 
பங்குனி உயர் அழுவத்து, | 
| 
தலை நாள்மீன் நிலை திரிய, | |
| 
நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர, | |
| 
தொல் நாள்மீன் துறை படிய, | |
| 
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது, | |
| 
10 | 
அளக்கர்த் திணை விளக்காகக் | 
| 
கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி, | |
| 
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே; | |
| 
அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர், | |
| 
'பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன் | |
| 
15 | 
நோய் இலனாயின் நன்றுமன் தில்' என | 
| 
அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப, | |
| 
அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே; | |
| 
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும், | |
| 
திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும், | |
| 
20 | 
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும், | 
| 
கால் இயல் கலி மாக் கதி இல வைகவும், | |
| 
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின், | |
| 
ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி, | |
| 
தன் துணை ஆயம் மறந்தனன்கொல்லோ | |
| 
25 | 
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு | 
| 
அளந்து கொடை அறியா ஈகை, | |
| 
மணி வரை அன்ன மாஅயோனே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்து, கூடலூர் கிழார் பாடியது.
 |