| முகப்பு | தொடக்கம் | 
| 
கோடை பாடிய பெரும்பூதனார் | 
| 
 259 | 
| 
ஏறுடைப் பெரு நிரை பெயர்தர, பெயராது, | |
| 
இலை புதை பெருங் காட்டுத் தலை கரந்து இருந்த | |
| 
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்; | |
| 
செல்லல், செல்லல்; சிறக்க, நின் உள்ளம், | |
| 
5 | 
முருகு மெய்ப் பட்ட புலைத்தி போலத் | 
| 
தாவுபு தெறிக்கும் ஆன்மேல் | |
| 
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே! | |
| 
திணை கரந்தை; துறை செரு மலைதல்; பிள்ளைப் பெயர்ச்சியும் ஆம்.
 | |
| 
.......................கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.
 |