| முகப்பு | தொடக்கம் | 
| 
கோவூர் கிழார் | 
| 
 31 | 
| 
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் | |
| 
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல, | |
| 
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை, | |
| 
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க, | |
| 
5 | 
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப் | 
| 
பாசறை அல்லது நீ ஒல்லாயே; | |
| 
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் | |
| 
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே; | |
| 
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர், | |
| 
10 | 
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய; | 
| 
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென் | |
| 
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து, | |
| 
குண கடல் பின்னது ஆக, குட கடல் | |
| 
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப, | |
| 
15 | 
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து, | 
| 
நெஞ்சு நடுங்கு அவலம் பாய, | |
| 
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே. | |
| 
திணை வாகை; துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
 | |
| 
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 32 | 
| 
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப் | |
| 
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ? | |
| 
'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள், | |
| 
ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என, | |
| 
5 | 
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் | 
| 
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்! | |
| 
தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி | |
| 
வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த | |
| 
பசு மண் குரூஉத் திரள் போல, அவன் | |
| 
10 | 
கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே. | 
| 
திணை பாடாண்திணை; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 33 | 
| 
கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன் | |
| 
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் | |
| 
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய, | |
| 
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் | |
| 
5 | 
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் | 
| 
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் | |
| 
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், | |
| 
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் | |
| 
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; | |
| 
10 | 
பாடுநர் வஞ்சி பாட, படையோர் | 
| 
தாது எரு மறுகின் பாசறை பொலிய, | |
| 
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த | |
| 
மலரா மாலைப் பந்து கண்டன்ன | |
| 
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் | |
| 
15 | 
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை | 
| 
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற | |
| 
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப, | |
| 
காம இருவர் அல்லது, யாமத்துத் | |
| 
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின், | |
| 
20 | 
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி | 
| 
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப, | |
| 
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே. | |
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 41 | 
| 
காலனும் காலம் பார்க்கும்; பாராது, | |
| 
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய, | |
| 
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே! | |
| 
திசை இரு நான்கும் உற்கம் உற்கவும், | |
| 
5 | 
பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும், | 
| 
வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும், | |
| 
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும், | |
| 
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும், | |
| 
களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும், | |
| 
10 | 
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும், | 
| 
கனவின் அரியன காணா, நனவில் | |
| 
செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி, | |
| 
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர், | |
| 
புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு | |
| 
15 | 
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு | 
| 
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு | |
| 
எரி நிகழ்ந்தன்ன செலவின் | |
| 
செரு மிகு வளவ! நின் சினைஇயோர் நாடே. | |
| 
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
 | |
| 
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 44 | 
| 
இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா, | |
| 
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ, | |
| 
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி, | |
| 
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து, | |
| 
5 | 
அலமரல் யானை உரும் என முழங்கவும், | 
| 
பால் இல் குழவி அலறவும், மகளிர் | |
| 
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல் | |
| 
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும், | |
| 
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்; | |
| 
10 | 
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்! | 
| 
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்; | |
| 
மறவை ஆயின், போரொடு திறத்தல்; | |
| 
அறவையும் மறவையும் அல்லையாக, | |
| 
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் | |
| 
15 | 
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் | 
| 
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 45 | 
| 
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்; | |
| 
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்; | |
| 
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு | |
| 
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; | |
| 
5 | 
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; | 
| 
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், | |
| 
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர் | |
| 
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு | |
| 
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே. | |
| 
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
 | |
| 
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 46 | 
| 
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் | |
| 
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, | |
| 
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி, | |
| 
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்; | |
| 
5 | 
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த | 
| 
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி, | |
| 
விருந்தின் புன்கண் நோவுடையர்; | |
| 
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.
 | 
| 
 47 | 
| 
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, | |
| 
'நெடிய' என்னாது சுரம் பல கடந்து | |
| 
வடியா நாவின் வல்லாங்குப் பாடி, | |
| 
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி, | |
| 
5 | 
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, | 
| 
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை | |
| 
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ? இன்றே; திறப்பட | |
| 
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி, | |
| 
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ் | |
| 
10 | 
மண் ஆள் செல்வம் எய்திய | 
| 
நும் ஓரன்ன செம்மலும் உடைத்தே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் நளங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, 'ஒற்று வந்தான்' என்று கொல்லப் புக்குழி, கோவூர் கிழார் பாடி, உய்யக்கொண்டது.
 | 
| 
 68 | 
| 
உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின் | |
| 
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது, | |
| 
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து, | |
| 
ஈங்கு எவன் செய்தியோ? பாண! 'பூண் சுமந்து, | |
| 
5 | 
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து | 
| 
மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின் | |
| 
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை, | |
| 
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச் | |
| 
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் | |
| 
10 | 
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன், | 
| 
உட்பகை ஒரு திறம் பட்டென, புட் பகைக்கு | |
| 
ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என, | |
| 
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப, | |
| 
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி, | |
| 
15 | 
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த | 
| 
நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை | |
| 
நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும் | |
| 
உறந்தையோனே குருசில்; | |
| 
பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே. | |
| 
திணை அது; துறை பாணாற்றுப்படை.
 | |
| 
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 70 | 
| 
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண! | |
| 
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன | |
| 
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை | |
| 
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி; | |
| 
5 | 
வினவல் ஆனா முது வாய் இரவல! | 
| 
தைஇத் திங்கள் தண் கயம் போல, | |
| 
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர், | |
| 
அடுதீ அல்லது சுடுதீ அறியாது; | |
| 
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன், | |
| 
10 | 
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி, | 
| 
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை | |
| 
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் | |
| 
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப் | |
| 
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல், | |
| 
15 | 
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச் | 
| 
செல்வைஆயின், செல்வை ஆகுவை; | |
| 
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் | |
| 
தலைப்பாடு அன்று, அவன் ஈகை; | |
| 
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 308 | 
| 
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின், | |
| 
மின் நேர் பச்சை, மிஞிற்றுக் குரல் சீறியாழ் | |
| 
நன்மை நிறைந்த நய வரு பாண! | |
| 
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் | |
| 
5 | 
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே; | 
| 
வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை | |
| 
சாந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே; | |
| 
உளம் கழி சுடர்ப் படை ஏந்தி, நம் பெருவிறல் | |
| 
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன் | |
| 
10 | 
புன் தலை மடப் பிடி நாண, | 
| 
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே. | |
| 
திணை வாகை; துறை மூதில் முல்லை.
 | |
| 
கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 373 | 
| 
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப, | |
| 
செரு நவில் வேழம் கொண்மூ ஆக, | |
| 
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக் | |
| 
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை, | |
| 
5 | 
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் | 
| 
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப, | |
| 
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை, | |
| 
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே! | |
| 
.............................................தண்ட மாப் பொறி. | |
| 
10 | 
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு, | 
| 
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து, | |
| 
மென் தோள் மகளிர் மன்றம் பேணார், | |
| 
புண்ணுவ | |
| 
..........................அணியப் புரவி வாழ்க என, | |
| 
15 | 
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர, | 
| 
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர் | |
| 
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா, | |
| 
............................................ற் றொக்கான | |
| 
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை, | |
| 
20 | 
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு, | 
| 
உரும் எறி மலையின், இரு நிலம் சேர, | |
| 
சென்றோன் மன்ற, சொ | |
| 
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப, | |
| 
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக, | |
| 
25 | 
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் | 
| 
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி; | |
| 
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்! | |
| 
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று, | |
| 
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி, | |
| 
30 | 
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும் | 
| 
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற, | |
| 
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி, | |
| 
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின், | |
| 
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும! | |
| 
35 | 
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத் | 
| 
தா இன்று உதவும் பண்பின், பேயொடு | |
| 
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து | |
| 
செஞ் செவி எருவை குழீஇ, | |
| 
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! | |
| 
40 | 
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம். | 
| 
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
 | |
| 
கிழார் பாடியது.
 | 
| 
 382 | 
| 
கடல்படை அடல் கொண்டி, | |
| 
மண்டுற்ற மலிர் நோன் தாள், | |
| 
தண் சோழ நாட்டுப் பொருநன், | |
| 
அலங்கு உளை அணி இவுளி | |
| 
5 | 
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்; | 
| 
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்; | |
| 
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' என; | |
| 
நெய் குய்ய ஊன் நவின்ற | |
| 
பல் சோற்றான், இன் சுவைய | |
| 
10 | 
நல்குரவின் பசித் துன்பின் நின் | 
| 
முன்னநாள் விட்ட மூது அறி சிறாஅரும், | |
| 
யானும், ஏழ் மணி, அம் கேழ், அணி உத்தி, | |
| 
கண் கேள்வி, கவை நாவின், | |
| 
நிறன் உற்ற, அராஅப் போலும் | |
| 
15 | 
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப, | 
| 
விடுமதி அத்தை, கடு மான் தோன்றல்! | |
| 
நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய; | |
| 
எனதே, கிடைக் காழ் அன்ன தெண் கண் மாக் கிணை | |
| 
கண் அகத்து யாத்த நுண் அரிச் சிறு கோல் | |
| 
20 | 
ஏறிதொறும் நுடங்கியாங்கு, நின் பகைஞர் | 
| 
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென், | |
| 
வென்ற தேர், பிறர் வேத்தவையானே. | |
| 
திணை அது; துறை கடைநிலை.
 | |
| 
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 386 | 
| 
நெடு நீர நிறை கயத்துப் | |
| 
படு மாரித் துளி போல, | |
| 
நெய் துள்ளிய வறை முகக்கவும், | |
| 
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும், | |
| 
5 | 
ஊன் கொண்ட வெண் மண்டை | 
| 
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும், | |
| 
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது, | |
| 
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை | |
| 
ஈத்தோன், எந்தை, இசை தனது ஆக; | |
| 
10 | 
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின் | 
| 
பாத்திப் பன் மலர்ப் பூத் ததும்பின; | |
| 
புறவே, புல் அருந்து பல் ஆயத்தான், | |
| 
வில் இருந்த வெங் குறும்பின்று; | |
| 
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர் | |
| 
15 | 
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து; | 
| 
கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி, | |
| 
பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து; | |
| 
அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே; | |
| 
பொராஅப் பொருநரேம்; | |
| 
20 | 
குண திசை நின்று குடமுதல் செலினும், | 
| 
குட திசை நின்று குணமுதல் செலினும், | |
| 
வட திசை நின்று தென்வயின் செலினும், | |
| 
தென் திசை நின்று குறுகாது நீடினும், | |
| 
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம் | |
| 
25 | 
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 400 | 
| 
மாக விசும்பின் வெண் திங்கள் | |
| 
மூ ஐந்தான் முறை முற்ற, | |
| 
கடல் நடுவண் கண்டன்ன என் | |
| 
இயம் இசையா, மரபு ஏத்தி, | |
| 
5 | 
கடைத் தோன்றிய கடைக் கங்குலான் | 
| 
பலர் துஞ்சவும் தான் துஞ்சான், | |
| 
உலகு காக்கும் உயர் ெ..........க் | |
| 
கேட்டோன், எந்தை, என் தெண் கிணைக் குரலே; | |
| 
கேட்டதற்கொண்டும், வேட்கை தண்டாது, | |
| 
10 | 
தொன்று படு சிதாஅர் மருங்கு நீக்கி, | 
| 
மிகப் பெருஞ் சிறப்பின் வீறு....... | |
| 
............................................லவான | |
| 
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி, | |
| 
நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து; | |
| 
15 | 
போது அறியேன், பதிப் பழகவும், | 
| 
தன் பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர் | |
| 
பசிப் பகை கடிதலும் வல்லன் மாதோ; | |
| 
மறவர் மலிந்த த............................................. | |
| 
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து, | |
| 
20 | 
இருங் கழி இழிதரு........ கலி வங்கம் | 
| 
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து, | |
| 
துறைதொறும் பிணிக்கும் நல் ஊர், | |
| 
உறைவு இன் யாணர்,........ கிழவோனே! | |
| 
திணை அது; துறை இயன்மொழி. | |