| முகப்பு | தொடக்கம் | 
| 
சாத்தந்தையார் | 
| 
 80 | 
| 
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், | |
| 
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி, | |
| 
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால் | |
| 
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே | |
| 
5 | 
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப் | 
| 
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம | |
| 
பசித்துப் பணை முயலும் யானை போல, | |
| 
இரு தலை ஒசிய எற்றி, | |
| 
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே. | |
| 
திணை தும்பை; துறை எருமை மறம்.
 | |
| 
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.
 | 
| 
 81 | 
| 
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே | |
| 
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே; | |
| 
யார்கொல் அளியர்தாமே ஆர் நார்ச் | |
| 
செறியத் தொடுத்த கண்ணிக் | |
| 
5 | 
கவி கை மள்ளன் கைப்பட்டோரே? | 
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 82 | 
| 
சாறு தலைக்கொண்டென, பெண் ஈற்று உற்றென, | |
| 
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று, | |
| 
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது | |
| 
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ | |
| 
5 | 
ஊர் கொள வந்த பொருநனொடு, | 
| 
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 287 | 
| 
துடி எறியும் புலைய! | |
| 
எறி கோல் கொள்ளும் இழிசின! | |
| 
காலம் மாரியின் அம்பு தைப்பினும், | |
| 
வயல் கெண்டையின் வேல் பிறழினும், | |
| 
5 | 
பொலம் புனை ஓடை அண்ணல் யானை | 
| 
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும், | |
| 
ஓடல் செல்லாப் பீடுடையாளர் | |
| 
நெடு நீர்ப் பொய்கைப் பிறழிய வாளை | |
| 
நெல்லுடை நெடு நகர்க் கூட்டுமுதல் புரளும், | |
| 
10 | 
தண்ணடை பெறுதல் யாவது? படினே, | 
| 
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும், | |
| 
உயர் நிலை உலகத்து, நுகர்ப; அதனால் | |
| 
வம்ப வேந்தன் தானை | |
| 
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே! | |
| 
திணை கரந்தை; துறை நீண்மொழி.
 | |
| 
சாத்தந்தையார் பாடியது.
 |