| முகப்பு | தொடக்கம் | 
| 
தங்கால் பொற்கொல்லனார் | 
| 
 326 | 
| 
ஊர் முது வேலிப் பார் நடை வெருகின் | |
| 
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை | |
| 
உயிர் நடுக்குற்றுப் புலா விட்டு அரற்ற, | |
| 
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த | |
| 
5 | 
பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து, | 
| 
கவிர்ப் பூ நெற்றிச் சேவலின் தணியும் | |
| 
அரு மிளை இருக்கையதுவே மனைவியும், | |
| 
வேட்டச் சிறாஅர் சேண் புலம் படராது, | |
| 
படப்பைக் கொண்ட குறுந் தாள் உடும்பின் | |
| 
10 | 
விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் விதவை, | 
| 
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு | |
| 
வரு விருந்து அயரும் விருப்பினள்; கிழவனும், | |
| 
அருஞ் சமம் ததையத் தாக்கி, பெருஞ் சமத்து | |
| 
அண்ணல் யானை அணிந்த | |
| 
15 | 
பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலனே. | 
| 
திணை வாகை; துறை மூதில் முல்லை.
 | |
| 
தங்கால் பொற்கொல்லனார் பாடியது.
 |