| முகப்பு | தொடக்கம் | 
| 
தொண்டைமான் இளந்திரையன் | 
| 
 185 | 
| 
கால் பார் கோத்து, ஞாலத்து இயக்கும் | |
| 
காவற் சாகாடு கைப்போன் மாணின், | |
| 
ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே; | |
| 
உய்த்தல் தேற்றானாயின், வைகலும், | |
| 
5 | 
பகைக் கூழ் அள்ளற் பட்டு, | 
| 
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே. | |
| 
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
 | |
| 
தொண்டைமான் இளந்திரையன் பாட்டு.
 |