| முகப்பு | தொடக்கம் | 
| 
நல்லிறையனார் | 
| 
 393 | 
| 
பதிமுதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் | |
| 
குறு நெடுந் துணையொடு கூமை வீதலின், | |
| 
குடி முறை பாடி, ஒய்யென வருந்தி, | |
| 
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் | |
| 
5 | 
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின், | 
| 
'வள்ளன்மையின் எம் வரைவோர் யார்?' என, | |
| 
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா, | |
| 
.................... கவகம் எல்லாம் ஒருபால் பட்டென, | |
| 
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி, | |
| 
10 | 
ஈர்ங்கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் | 
| 
கூர்ந்த எவ்வம் விட, கொழு நிணம் கிழிப்ப, | |
| 
கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த | |
| 
மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன, | |
| 
வெண் நிண மூரி அருள, நாள் உற | |
| 
15 | 
ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என் | 
| 
தொன்று படு சிதாஅர் துவர நீக்கி, | |
| 
போது விரி பகன்றைப் புது மலர் அன்ன, | |
| 
அகன்று மடி கலிங்கம் உடீஇ, செல்வமும், | |
| 
கேடு இன்று நல்குமதி, பெரும! மாசு இல் | |
| 
20 | 
மதி புரை மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, | 
| 
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடி, | |
| 
'கோடை ஆயினும், கோடி............................... | |
| 
காவிரி புரக்கும் நல் நாட்டுப் பொருந! | |
| 
வாய் வாள் வளவன்! வாழ்க! எனப் | |
| 
25 | 
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.
 |