| முகப்பு | தொடக்கம் | 
| 
நெட்டிமையார் | 
| 
 9 | 
| 
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும், | |
| 
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் | |
| 
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும் | |
| 
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும், | |
| 
5 | 
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என, | 
| 
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின் | |
| 
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் | |
| 
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச் | |
| 
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த, | |
| 
10 | 
முந்நீர் விழவின், நெடியோன் | 
| 
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
 | 
| 
 12 | 
| 
பாணர் தாமரை மலையவும், புலவர் | |
| 
பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும், | |
| 
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி! | |
| 
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு, | |
| 
5 | 
இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே? | 
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
 | 
| 
 15 | 
| 
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், | |
| 
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, | |
| 
பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்; | |
| 
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல், | |
| 
5 | 
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத் | 
| 
தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து; | |
| 
துளங்கு இயலான், பணை எருத்தின், | |
| 
பாவு அடியான், செறல் நோக்கின், | |
| 
ஒளிறு மருப்பின் களிறு அவர | |
| 
10 | 
காப்பு உடைய கயம் படியினை; | 
| 
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின், | |
| 
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு | |
| 
நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார் | |
| 
ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக் கொண்மார், | |
| 
15 | 
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய, | 
| 
வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல் | |
| 
நல் பனுவல், நால் வேதத்து, | |
| 
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை | |
| 
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண் | |
| 
20 | 
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, | 
| 
யூபம் நட்ட வியன் களம் பலகொல்? | |
| 
யா பலகொல்லோ? பெரும! வார் உற்று | |
| 
விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின் | |
| 
பாடினி பாடும் வஞ்சிக்கு | |
| 
25 | 
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
 |