| முகப்பு | தொடக்கம் | 
| 
நெடும் பல்லியத்தனார் | 
| 
 64 | 
| 
நல் யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கி, | |
| 
செல்லாமோதில் சில் வளை விறலி! | |
| 
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, | |
| 
விசும்பு ஆடு எருவை பசுந் தடி தடுப்ப, | |
| 
5 | 
பகைப் புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின் | 
| 
குடுமிக் கோமாற் கண்டு, | |
| 
நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே? | |
| 
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
 | |
| 
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.
 |