| முகப்பு | தொடக்கம் | 
| 
பாண்டியன் அறிவுடைநம்பி | 
| 
 188 | 
| 
படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் | |
| 
உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப் படக் | |
| 
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி, | |
| 
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும், | |
| 
5 | 
நெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும், | 
| 
மயக்குறு மக்களை இல்லோர்க்குப் | |
| 
பயக் குறை இல்லை தாம் வாழு நாளே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு.
 |