| முகப்பு | தொடக்கம் | 
| 
பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் | 
| 
 183 | 
| 
உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும், | |
| 
பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே; | |
| 
பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும், | |
| 
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்; | |
| 
5 | 
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், | 
| 
'மூத்தோன் வருக' என்னாது, அவருள் | |
| 
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; | |
| 
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், | |
| 
கீழ்ப்பால் ஒருவன் கற்பின், | |
| 
10 | 
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாட்டு.
 |