| முகப்பு | தொடக்கம் | 
| 
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் | 
| 
 72 | 
| 
'நகுதக்கனரே, நாடு மீக்கூறுநர்; | |
| 
இளையன் இவன்' என உளையக் கூறி, | |
| 
'படு மணி இரட்டும் பா அடிப் பணைத் தாள் | |
| 
நெடு நல் யானையும், தேரும், மாவும், | |
| 
5 | 
படை அமை மறவரும், உடையம் யாம்' என்று | 
| 
உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கி, | |
| 
சிறு சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை | |
| 
அருஞ் சமம் சிதையத் தாக்கி, முரசமொடு | |
| 
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய | |
| 
10 | 
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது, | 
| 
'கொடியன் எம் இறை' எனக் கண்ணீர் பரப்பி, | |
| 
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக; | |
| 
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி | |
| 
மாங்குடி மருதன் தலைவன் ஆக, | |
| 
15 | 
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் | 
| 
புலவர் பாடாது வரைக, என் நிலவரை; | |
| 
புரப்போர் புன்கண் கூர, | |
| 
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் பாட்டு.
 |