| முகப்பு | தொடக்கம் | 
| 
பிசிராந்தையார் | 
| 
 67 | 
| 
அன்னச் சேவல்! அன்னச் சேவல்! | |
| 
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் | |
| 
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல, | |
| 
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் | |
| 
5 | 
மையல் மாலை, யாம் கையறுபு இனைய, | 
| 
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி, | |
| 
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது | |
| 
சோழ நல் நாட்டுப் படினே, கோழி | |
| 
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ, | |
| 
10 | 
வாயில் விடாது கோயில் புக்கு, எம் | 
| 
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர் | |
| 
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின் | |
| 
இன்புறு பேடை அணிய, தன் | |
| 
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே. | |
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
 | |
| 
கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
 | 
| 
 184 | 
| 
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, | |
| 
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; | |
| 
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, | |
| 
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்; | |
| 
5 | 
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, | 
| 
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்; | |
| 
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் | |
| 
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, | |
| 
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், | |
| 
10 | 
யானை புக்க புலம் போல, | 
| 
தானும் உண்ணான், உலகமும் கெடுமே. | |
| 
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
 | |
| 
பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.
 | 
| 
 191 | 
| 
'யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல் | |
| 
யாங்கு ஆகியர்?' என வினவுதிர் ஆயின், | |
| 
மாண்ட என் மனைவியொடு, மக்களும் நிரம்பினர்; | |
| 
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும் | |
| 
5 | 
அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை | 
| 
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் | |
| 
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரை,'கேட்கும் காலம் பலவாலோ? நரை நுமக்கு இல்லையாலோ?' என்ற சான்றோர்க்கு அவர் சொற்றது.
 | 
| 
 212 | 
| 
'நும் கோ யார்?' என வினவின், எம் கோக் | |
| 
களமர்க்கு அரித்த விளையல் வெங் கள் | |
| 
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா, | |
| 
ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ, | |
| 
5 | 
வைகு தொழில் மடியும் மடியா விழவின் | 
| 
யாணர் நல் நாட்டுள்ளும், பாணர் | |
| 
பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகி, | |
| 
கோழியோனே, கோப்பெருஞ்சோழன் | |
| 
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ, | |
| 
10 | 
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே. | 
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
 |