| முகப்பு | தொடக்கம் | 
| 
பெருந் தலைச் சாத்தனார் | 
| 
 151 | 
| 
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப, | |
| 
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், | |
| 
கிழவன் சேட் புலம் படரின், இழை அணிந்து, | |
| 
புன் தலை மடப் பிடி பரிசிலாக, | |
| 
5 | 
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்க் | 
| 
கண்டீரக்கோன்ஆகலின், நன்றும் | |
| 
முயங்கல் ஆன்றிசின், யானே; பொலந் தேர் | |
| 
நன்னன் மருகன் அன்றியும், நீயும் | |
| 
முயங்கற்கு ஒத்தனை மன்னே; வயங்கு மொழிப் | |
| 
10 | 
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை | 
| 
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் | |
| 
மணம் கமழ் மால் வரை வரைந்தனர், எமரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
இளங் கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் ஒருங்கு இருந்தவழி, சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங் கண்டீரக்கோவைப் புல்லி, இள விச்சிக்கோவைப் புல்லாராக 'என்னை என் செயப் புல்லீராயினீர்?' என, அவர் பாடியது.
 | 
| 
 164 | 
| 
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் | |
| 
ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா, | |
| 
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி, | |
| 
இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை | |
| 
5 | 
சுவைத்தொறு அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி, | 
| 
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் என் | |
| 
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ, | |
| 
நிற் படர்ந்திசினே நல் போர்க் குமண! | |
| 
என் நிலை அறிந்தனைஆயின், இந் நிலைத் | |
| 
10 | 
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய | 
| 
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ், | |
| 
மண் அமை முழவின், வயிரியர் | |
| 
இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே. | |
| 
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
 | |
| 
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
 | 
| 
 165 | 
| 
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் | |
| 
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே; | |
| 
துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர், | |
| 
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின், | |
| 
5 | 
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே; | 
| 
தாள் தாழ் படு மணி இரட்டும், பூ நுதல், | |
| 
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக் | |
| 
கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப் | |
| 
பாடி நின்றனெனாக, 'கொன்னே | |
| 
10 | 
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என | 
| 
நாடு இழந்ததனினும் நனி இன்னாது' என, | |
| 
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய, | |
| 
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்; | |
| 
ஆடு மலி உவகையொடு வருவல், | |
| 
15 | 
ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே. | 
| 
திணை அது; துறை பரிசில் விடை.
 | |
| 
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து, இளங் குமணற்குக் காட்டி, பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
 | 
| 
 205 | 
| 
முற்றிய திருவின் மூவர் ஆயினும், | |
| 
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே; | |
| 
விறல் சினம் தணிந்த விரை பரிப் புரவி | |
| 
உறுவர் செல் சார்வு ஆகி, செறுவர் | |
| 
5 | 
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை, | 
| 
வெள் வீ வேலிக் கோடைப் பொருந! | |
| 
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய | |
| 
மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கத நாய், | |
| 
நோன் சிலை, வேட்டுவ! நோய் இலையாகுக! | |
| 
10 | 
ஆர் கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்து, | 
| 
கடல்வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ | |
| 
நீர் இன்று பெயராவாங்கு, தேரொடு | |
| 
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் | |
| 
களிறு இன்று பெயரல, பரிசிலர் கடும்பே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
 | 
| 
 209 | 
| 
பொய்கை நாரை போர்வில் சேக்கும் | |
| 
நெய்தல் அம் கழனி, நெல் அரி தொழுவர் | |
| 
கூம்பு விடு மெண் பிணி அவிழ்ந்த ஆம்பல் | |
| 
அகல் அடை அரியல் மாந்தி, தெண் கடல் | |
| 
5 | 
படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும் | 
| 
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! | |
| 
பல் கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து, | |
| 
பெரு மலை விடரகம் சிலம்ப முன்னி, | |
| 
பழனுடைப் பெரு மரம் தீர்ந்தென, கையற்று, | |
| 
10 | 
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் | 
| 
நசை தர வந்து, நின் இசை நுவல் பரிசிலென் | |
| 
வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந! | |
| 
ஈயாய் ஆயினும், இரங்குவென்அல்லேன்; | |
| 
நோய் இலை ஆகுமதி; பெரும! நம்முள் | |
| 
15 | 
குறு நணி காண்குவதாக நாளும், | 
| 
நறும் பல் ஒலிவரும் கதுப்பின், தே மொழி, | |
| 
தெரிஇழை மகளிர் பாணி பார்க்கும் | |
| 
பெரு வரை அன்ன மார்பின், | |
| 
செரு வெஞ் சேஎய்! நின் மகிழ் இருக்கையே! | |
| 
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
 | |
| 
மூவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
 | 
| 
 294 | 
| 
'வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தர, | |
| 
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை, | |
| 
குமரிப் படை தழீஇய கூற்று வினை ஆடவர் | |
| 
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து, | |
| 
5 | 
இறையும் பெயரும் தோற்றி, நுமருள் | 
| 
நாள் முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு' என, | |
| 
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப, யாவரும் | |
| 
அரவு உமிழ் மணியின் குறுகார் | |
| 
நிரை தார் மார்பின் நின் கேள்வனை, பிறரே. | |
| 
திணை தும்பை; துறை தானைமறம்.
 | |
| 
பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
 |