| முகப்பு | தொடக்கம் | 
| 
பேரெயின் முறுவலார் | 
| 
 239 | 
| 
தொடியுடைய தோள் மணந்தனன்; | |
| 
கடி காவில் பூச் சூடினன்; | |
| 
தண் கமழும் சாந்து நீவினன்; | |
| 
செற்றோரை வழி தபுத்தனன்; | |
| 
5 | 
நட்டோரை உயர்பு கூறினன்; | 
| 
'வலியர்' என, வழிமொழியலன்; | |
| 
'மெலியர்' என, மீக்கூறலன்; | |
| 
பிறரைத் தான் இரப்பு அறியலன்; | |
| 
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்; | |
| 
10 | 
வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்; | 
| 
வருபடை எதிர் தாங்கினன்; | |
| 
பெயர்படை புறங்கண்டனன்; | |
| 
கடும் பரிய மாக் கடவினன்; | |
| 
நெடுந் தெருவில் தேர் வழங்கினன்; | |
| 
15 | 
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்; | 
| 
தீம் செறி தசும்பு தொலைச்சினன்; | |
| 
பாண் உவப்ப பசி தீர்த்தனன்; | |
| 
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச் | |
| 
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் | |
| 
20 | 
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ! | 
| 
படு வழிப் படுக, இப் புகழ் வெய்யோன் தலையே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் பாடியது.
 |