| முகப்பு | தொடக்கம் | 
| 
பொன் முடியார் | 
| 
 299 | 
| 
பருத்தி வேலிச் சீறூர் மன்னன் | |
| 
உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி, | |
| 
கடல் மண்டு தோணியின், படை முகம் போழ | |
| 
நெய்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின், | |
| 
5 | 
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, | 
| 
அணங்குடை முருகன் கோட்டத்துக் | |
| 
கலம் தொடா மகளிரின், இகந்து நின்றவ்வே. | |
| 
திணை நொச்சி; துறை குதிரை மறம்.
 | |
| 
பொன்முடியார் பாடியது.
 | 
| 
 310 | 
| 
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின், | |
| 
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு, | |
| 
உயவொடு வருந்தும் மன்னே! இனியே | |
| 
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான், | |
| 
5 | 
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, | 
| 
உன்னிலன் என்னும், புண் ஒன்று அம்பு | |
| 
மான் உளை அன்ன குடுமித் | |
| 
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பொன்முடியார் பாடியது.
 | 
| 
 312 | 
| 
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; | |
| 
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; | |
| 
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; | |
| 
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, | |
| 
5 | 
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி, | 
| 
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. | |
| 
திணை வாகை; துறை மூதில்முல்லை.
 | |
| 
பொன்முடியார் பாடியது.
 |