| முகப்பு | தொடக்கம் | 
| 
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் | 
| 
 56 | 
| 
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை, | |
| 
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்; | |
| 
கடல் வளர் புரி வளை புரையும் மேனி, | |
| 
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்; | |
| 
5 | 
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, | 
| 
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும், | |
| 
மணி மயில் உயரிய மாறா வென்றி, | |
| 
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என | |
| 
ஞாலம் காக்கும் கால முன்பின், | |
| 
10 | 
தோலா நல் இசை, நால்வருள்ளும், | 
| 
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்; | |
| 
வலி ஒத்தீயே, வாலியோனை; | |
| 
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை; | |
| 
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்; | |
| 
15 | 
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும் | 
| 
அரியவும் உளவோ, நினக்கே? அதனால், | |
| 
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா, | |
| 
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் | |
| 
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும் | |
| 
20 | 
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து, | 
| 
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற! | |
| 
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் | |
| 
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத் | |
| 
தண் கதிர் மதியம் போலவும், | |
| 
25 | 
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! | 
| 
திணை அது; துறை பூவை நிலை.
 | |
| 
அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
 | 
| 
 189 | 
| 
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி | |
| 
வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும், | |
| 
நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான் | |
| 
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், | |
| 
5 | 
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; | 
| 
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே; | |
| 
செல்வத்துப் பயனே ஈதல்; | |
| 
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
 |