| முகப்பு | தொடக்கம் | 
| 
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் | 
| 
 316 | 
| 
கள்ளின் வாழ்த்தி, கள்ளின் வாழ்த்தி, | |
| 
காட்டொடு மிடைந்த சீயா முன்றில், | |
| 
நாட் செருக்கு அனந்தர்த் துஞ்சுவோனே. | |
| 
அவன் எம் இறைவன்; யாம் அவன் பாணர்; | |
| 
5 | 
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் | 
| 
இரும் புடைப் பழ வாள் வைத்தனன்; இன்று இக் | |
| 
கருங் கோட்டுச் சீறியாழ் பணையம்; இது கொண்டு | |
| 
ஈவதிலாளன் என்னாது, நீயும், | |
| 
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய, | |
| 
10 | 
கள்ளுடைக் கலத்தேம் யாம் மகிழ் தூங்க, | 
| 
சென்று வாய் சிவந்து மேல் வருக | |
| 
சிறு கண் யானை வேந்து விழுமுறவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.
 |