| முகப்பு | தொடக்கம் | 
| 
மதுரைப் படை மங்கமன்னியார் | 
| 
 351 | 
| 
படு மணி மருங்கின பணைத் தாள் யானையும், | |
| 
கொடி நுடங்கு மிசைய தேரும், மாவும், | |
| 
படை அமை மறவரொடு, துவன்றிக் கல்லென, | |
| 
கடல் கண்டன்ன கண் அகன் தானை | |
| 
5 | 
வென்று எறி முரசின் வேந்தர், என்றும், | 
| 
வண் கை எயினன் வாகை அன்ன | |
| 
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்; | |
| 
என் ஆவதுகொல் தானே தெண் நீர்ப் | |
| 
பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை | |
| 
10 | 
தேங் கொள் மருதின் பூஞ் சினை முனையின், | 
| 
காமரு காஞ்சித் துஞ்சும் | |
| 
ஏமம்சால் சிறப்பின், இப் பணை நல் ஊரே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.
 |