| முகப்பு | தொடக்கம் | 
| 
மதுரைப் பேராலவாயார் | 
| 
 247 | 
| 
யானை தந்த முளி மர விறகின் | |
| 
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து, | |
| 
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி, | |
| 
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில், | |
| 
5 | 
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ, | 
| 
பேர் அஞர்க் கண்ணள், பெருங் காடு நோக்கி, | |
| 
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் | |
| 
முழவு கண் துயிலாக் கடியுடை வியல் நகர்ச் | |
| 
சிறு நனி தமியள் ஆயினும், | |
| 
10 | 
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவள் தீப் பாய்வாளைக் கண்டு மதுரைப் பேராலவாயார் சொல்லியது.
 | 
| 
 262 | 
| 
நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; | |
| 
பாசுவல் இட்ட புன் கால் பந்தர்ப் | |
| 
புனல் தரும் இள மணல் நிறையப் பெய்ம்மின் | |
| 
ஒன்னார் முன்னிலை முருக்கி, பின் நின்று, | |
| 
5 | 
நிரையொடு வரூஉம் என்னைக்கு | 
| 
உழையோர் தன்னினும் பெருஞ் சாயலரே. | |
| 
திணை வெட்சி; துறை உண்டாட்டு; தலைத்தோற்றமும் ஆம்.
 | |
| 
....................மதுரைப் பேராலவாயார் பாடியது.
 |