| முகப்பு | தொடக்கம் | 
| 
மார்க்கண்டேயனார் | 
| 
 365 | 
| 
'மயங்கு இருங் கருவிய விசும்பு முகன் ஆக, | |
| 
இயங்கிய இரு சுடர் கண் என, பெயரிய | |
| 
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம், | |
| 
வயிரக் குறட்டின் வயங்கு மணி ஆரத்துப் | |
| 
5 | 
பொன்அம் திகிரி முன் சமத்து உருட்டி, | 
| 
பொருநர்க் காணாச் செரு மிகு முன்பின் | |
| 
முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும் | |
| 
விலை நலப் பெண்டிரின் பலர் மீக்கூற, | |
| 
உள்ளேன் வாழியர், யான்' எனப் பல் மாண் | |
| 
10 | 
நிலமகள் அழுத காஞ்சியும் | 
| 
உண்டு என உரைப்பரால், உணர்ந்திசினோரே. | |
| 
திணை காஞ்சி; துறை பெருங்காஞ்சி.
 | |
| 
மார்க்கண்டேயனார் பாடியது.
 |