| முகப்பு | தொடக்கம் | 
| 
மாறோக்கத்து நப்பசலையார் | 
| 
 37 | 
| 
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, | |
| 
வேக வெந் திறல், நாகம் புக்கென, | |
| 
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப் | |
| 
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு, | |
| 
5 | 
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல், | 
| 
சினம் கெழு தானை, செம்பியன் மருக! | |
| 
கராஅம் கலித்த குண்டு கண் அகழி, | |
| 
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி, | |
| 
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் | |
| 
10 | 
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி, | 
| 
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர், | |
| 
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின், | |
| 
'நல்ல' என்னாது, சிதைத்தல் | |
| 
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே. | |
| 
திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
 | |
| 
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
 | 
| 
 39 | 
| 
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி | |
| 
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக் | |
| 
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக! | |
| 
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல் | |
| 
5 | 
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல் | 
| 
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், | |
| 
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று, | |
| 
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, | |
| 
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால் | |
| 
10 | 
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு | 
| 
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள், | |
| 
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ! | |
| 
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய | |
| 
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு | |
| 
15 | 
இமயம் சூட்டிய ஏம விற்பொறி, | 
| 
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய, | |
| 
வாடா வஞ்சி வாட்டும் நின் | |
| 
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
 | 
| 
 126 | 
| 
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, | |
| 
பாணர் சென்னி பொலியத் தைஇ, | |
| 
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர் | |
| 
ஓடாப் பூட்கை உரவோன் மருக! | |
| 
5 | 
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே | 
| 
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல் | |
| 
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின், | |
| 
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந! | |
| 
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய, | |
| 
10 | 
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் | 
| 
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன், | |
| 
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி, | |
| 
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு | |
| 
சினம் மிகு தானை வானவன் குட கடல், | |
| 
15 | 
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி, | 
| 
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை, | |
| 
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின் | |
| 
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று | |
| 
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப, | |
| 
20 | 
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய, | 
| 
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும் | |
| 
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் | |
| 
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே! | |
| 
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
 | |
| 
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
 | 
| 
 174 | 
| 
அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென, | |
| 
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது, | |
| 
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து | |
| 
இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல் | |
| 
5 | 
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு, | 
| 
அரசு இழந்திருந்த அல்லல் காலை, | |
| 
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது | |
| 
இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி | |
| 
மல்லல் நல் நாட்டு அல்லல் தீர, | |
| 
10 | 
பொய்யா நாவின் கபிலன் பாடிய, | 
| 
மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச் | |
| 
செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட | |
| 
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை, | |
| 
அரு வழி இருந்த பெரு விறல் வளவன் | |
| 
15 | 
மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை | 
| 
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந! | |
| 
விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண், | |
| 
சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன் | |
| 
ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர், | |
| 
20 | 
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், | 
| 
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் | |
| 
கவலை நெஞ்சத்து அவலம் தீர, | |
| 
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்! | |
| 
கல் கண் பொடிய, கானம் வெம்ப, | |
| 
25 | 
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க, | 
| 
கோடை நீடிய பைது அறு காலை, | |
| 
இரு நிலம் நெளிய ஈண்டி, | |
| 
உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே. | |
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
 | 
| 
 226 | 
| 
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும், | |
| 
உற்றன்று ஆயினும், உய்வு இன்று மாதோ; | |
| 
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி, | |
| 
இரந்தன்றாகல் வேண்டும் பொலந் தார் | |
| 
5 | 
மண்டு அமர் கடக்கும் தானைத் | 
| 
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
 | 
| 
 280 | 
| 
என்னை மார்பில் புண்ணும் வெய்ய; | |
| 
நடு நாள் வந்து தும்பியும் துவைக்கும்; | |
| 
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா; | |
| 
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்; | |
| 
5 | 
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்; | 
| 
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் | |
| 
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா; | |
| 
துடிய! பாண! பாடு வல் விறலி! | |
| 
என் ஆகுவிர்கொல்? அளியிர்; நுமக்கும் | |
| 
10 | 
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே! யானும் | 
| 
மண்ணுறு மழித் தலைத் தெண் நீர் வார, | |
| 
தொன்று தாம் உடுத்த அம் பகைத் தெரியல் | |
| 
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் | |
| 
கழி கல மகளிர் போல, | |
| 
15 | 
வழி நினைந்திருத்தல், அதனினும் அரிதே! | 
| 
திணை பொதுவியல்; துறை ஆனந்தப்பையுள்.
 | |
| 
மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
 | 
| 
 383 | 
| 
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து, | |
| 
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், | |
| 
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி, | |
| 
நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தி, | |
| 
5 | 
தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து, | 
| 
அருங் கடி வியல் நகர்க் குறுகல் வேண்டி, | |
| 
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் | |
| 
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள, | |
| 
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின் | |
| 
10 | 
கழை படு சொலியின் இழை அணி வாரா, | 
| 
ஒண் பூங் கலிங்கம் உடீஇ, நுண் பூண் | |
| 
வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்தி, | |
| 
கற்புடை மடந்தை தன் புறம் புல்ல, | |
| 
எற் பெயர்ந்த நோக்கி..................................... | |
| 
15 | 
..............................................கல் கொண்டு, | 
| 
அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழி, | |
| 
பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே; | |
| 
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி, | |
| 
நரை முக ஊகமொடு, உகளும், சென................ | |
| 
20 | 
.......................கன்று பல கெழீஇய | 
| 
கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என | |
| 
ஒருவனை உடையேன்மன்னே, யானே; | |
| 
அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
...........................மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.
 |