| முகப்பு | தொடக்கம் | 
| 
வெண்ணிக் குயத்தியார் | 
| 
 66 | 
| 
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி, | |
| 
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக! | |
| 
களி இயல் யானைக் கரிகால்வளவ! | |
| 
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற | |
| 
5 | 
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே | 
| 
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை, | |
| 
மிகப் புகழ் உலகம் எய்தி, | |
| 
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே? | |
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது.
 |