| முகப்பு | தொடக்கம் | 
| 
244, 256, 257, 263, 297, 307, 323, 327, 328, 333, 339, 340, 355,361 | 
| 
 244 | 
| 
பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா; | |
| 
விறலியர் முன்கையும் தொடியின் பொலியா;
 | |
| 
இரவல் மாக்களும்... ... ... ... ... ... ... ... ... ...
 | 
| 
 256 | 
| 
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! | |
| 
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய | |
| 
சிறு வெண் பல்லி போல, தன்னொடு | |
| 
சுரம் பல வந்த எமக்கும் அருளி, | |
| 
5 | 
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி | 
| 
அகலிதாக வனைமோ | |
| 
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
............................................
 | 
| 
 257 | 
| 
செருப்பு இடைச் சிறு பரல் அன்னன்; கணைக் கால், | |
| 
அவ் வயிற்று, அகன்ற மார்பின், பைங் கண், | |
| 
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய், | |
| 
செவி இறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு, | |
| 
5 | 
யார்கொலோ, அளியன்தானே? தேரின் | 
| 
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே; அரண் எனக் | |
| 
காடு கைக் கொண்டன்றும், இலனே; காலை, | |
| 
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி, | |
| 
கையின் சுட்டிப் பையென எண்ணி, | |
| 
10 | 
சிலையின் மாற்றியோனே; அவைதாம் | 
| 
மிகப் பலவாயினும், என் ஆம் எனைத்தும் | |
| 
வெண் கோள் தோன்றாக் குழிசியொடு, | |
| 
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே? | |
| 
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
 | |
| 
............................................
 | 
| 
 263 | 
| 
பெருங் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் | |
| 
இரும் பறை இரவல! சேறிஆயின், | |
| 
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது, | |
| 
வண்டு மேம்படூஉம், இவ் வறநிலை ஆறே | |
| 
5 | 
பல் ஆத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து, | 
| 
கல்லா இளையர் நீங்க நீங்கான், | |
| 
வில் உமிழ் கடுங் கணை மூழ்க, | |
| 
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே. | |
| 
திணை கரந்தை; துறை கையறுநிலை.
 | |
| 
..............................................
 | 
| 
 297 | 
| 
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை | |
| 
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் | |
| 
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை, | |
| 
கன்றுடை மரை ஆத் துஞ்சும் சீறூர்க் | |
| 
5 | 
கோள் இவண் வேண்டேம், புரவே; நார் அரி | 
| 
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி, | |
| 
துறை நனி கெழீஇக் கம்புள் ஈனும் | |
| 
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந் நுதி | |
| 
நெடு வேல் பாய்ந்த மார்பின், | |
| 
10 | 
மடல் வன் போந்தையின், நிற்குமோர்க்கே. | 
| 
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
 | |
| 
.............................................
 | 
| 
 307 | 
| 
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? | |
| 
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்; | |
| 
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்; | |
| 
வேனல் வரி அணில் வாலத்து அன்ன, | |
| 
5 | 
கான ஊகின் கழன்று உகு முது வீ | 
| 
அரியல் வான் குழல் சுரியல் தங்க, | |
| 
நீரும் புல்லும் ஈயாது, உமணர் | |
| 
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த | |
| 
வாழா வான் பகடு ஏய்ப்ப, தெறுவர் | |
| 
10 | 
பேர் உயிர் கொள்ளும் மாதோ; அது கண்டு, | 
| 
வெஞ் சின யானை வேந்தனும், 'இக் களத்து, | |
| 
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல்' என, | |
| 
பண் கொளற்கு அருமை நோக்கி, | |
| 
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே. | |
| 
திணை தும்பை; துறை களிற்றுடனிலை.
 | |
| 
.............................................
 | 
| 
 323 | 
| 
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச் | |
| 
சினம் கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும் | |
| 
கா ... ... ... ... ..... ..... ...... ...... ..... க்கு | |
| 
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை, | |
| 
5 | 
வெள் வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் | 
| 
கறையடி யானைக்கு அல்லது | |
| 
உறை கழிப்பு அறியா, வேலோன் ஊரே. | |
| 
............................................
 | |
| 
................டார் கிழார் பாடியது.
 | 
| 
 327 | 
| 
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற | |
| 
சில் விளை வரகின் புல்லென் குப்பை, | |
| 
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் | |
| 
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின், | |
| 
5 | 
ஒக்கல் ஒற்கம் சொலிய, தன் ஊர்ச் | 
| 
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி, | |
| 
வரகு கடன் இரக்கும் நெடுந் தகை | |
| 
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
............................................
 | 
| 
 328 | 
| 
..........டை முதல் புறவு சேர்ந்திருந்த | |
| 
புன் புலச் சீறூர், நெல் விளையாதே; | |
| 
வரகும் தினையும் உள்ளவை எல்லாம் | |
| 
இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன; | |
| 
5 | 
................. டு அமைந்தனனே; | 
| 
அன்னன் ஆயினும், பாண! நன்றும் | |
| 
வெள்ளத்திடும் பாலுள் உறை தொட.... | |
| 
களவுப் புளி அன்ன விளை.... | |
| 
..............வாடு ஊன் கொழுங் குறை | |
| 
10 | 
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு, | 
| 
துடுப்பொடு சிவணிய களிக் கொள் வெண் சோறு | |
| 
உண்டு, இனிது இருந்த பின் | |
| 
... ... ... ... .... ... தருகுவன் மாதோ | |
| 
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை | |
| 
15 | 
முயல் வந்து கறிக்கும் முன்றில், | 
| 
சீறூர் மன்னனைப் பாடினை செலினே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பங்கு ............................. பாடியது.
 | 
| 
 333 | 
| 
நீருள் பட்ட மாரிப் பேர் உறை | |
| 
மொக்குள் அன்ன பொகுட்டு விழிக் கண்ண, | |
| 
கரும் பிடர்த் தலைய, பெருஞ் செவிக் குறு முயல் | |
| 
உள் ஊர்க் குறும் புதல் துள்ளுவன உகளும் | |
| 
5 | 
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின், | 
| 
'உண்க' என உணரா உயவிற்று ஆயினும், | |
| 
தங்கினிர் சென்மோ, புலவிர்! நன்றும்; | |
| 
சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி, | |
| 
வரகும் தினையும் உள்ளவை எல்லாம் | |
| 
10 | 
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென, | 
| 
குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின், | |
| 
குரல் உணங்கு விதைத் தினை உரல் வாய்ப் பெய்து, | |
| 
சிறிது புறப்பட்டன்றோ இலளே; தன் ஊர் | |
| 
வேட்டக் குடிதொறும் கூட்டு | |
| 
15 | 
.............................................. உடும்பு செய் | 
| 
பாணி நெடுந் தேர் வல்லரோடு ஊரா, | |
| 
வம்பு அணி யானை வேந்து தலைவரினும், | |
| 
உண்பது மன்னும் அதுவே; | |
| 
பரிசில் மன்னும், குருசில் கொண்டதுவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
............................................
 | 
| 
 339 | 
| 
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு | |
| 
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர் | |
| 
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து; | |
| 
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல் | |
| 
5 | 
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; | 
| 
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர் | |
| 
கடல் ஆடிக் கயம் பாய்ந்து, | |
| 
கழி நெய்தல் பூக்குறூஉந்து; | |
| 
பைந் தழை துயல்வரும் செறு விறற.............. | |
| 
10 | 
..............................................லத்தி | 
| 
வளர வேண்டும், அவளே, என்றும் | |
| 
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி, | |
| 
முறம் செவி யானை வேந்தர் | |
| 
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
............................................
 | 
| 
 340 | 
| 
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக் | |
| 
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள், | |
| 
மா மகள் | |
| 
....................... ல் என வினவுதி, கேள், நீ: | |
| 
5 | 
எடுப்பவெ...,............................................ | 
| 
..........................மைந்தர் தந்தை | |
| 
இரும் பனை அன்ன பெருங் கை யானை | |
| 
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும் | |
| 
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 அ............................... பாடியது. | 
| 
 3555 | 
| 
மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும், | |
| 
நீஇர் இன்மையின், கன்று மேய்ந்து உகளும்; | |
| 
ஊரது நிலைமையும் இதுவே: | |
| 
............................................ | |
| 
..............................................
 | |
| 
..............................................
 | 
| 
 361 | 
| 
கார் எதிர் உருமின் உரறி, கல்லென, | |
| 
ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்! | |
| 
நின் வரவு அஞ்சலன் மாதோ; நன் பல | |
| 
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு, | |
| 
5 | 
அருங் கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத் | 
| 
தாயின் நன்று பலர்க்கு ஈத்து, | |
| 
தெருள் நடை மா களிறொடு தன் | |
| 
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும், | |
| 
உருள் நடை ........................ான்றதன் | |
| 
10 | 
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும், | 
| 
புரி மாலையர் பாடினிக்குப் | |
| 
பொலந் தாமரைப் பூம் பாணரொடு | |
| 
கலந்து அளைஇய நீள் இருக்கையால் | |
| 
பொறையொ............ மான் நோக்கின், | |
| 
15 | 
வில் என விலங்கிய புருவத்து, வல்லென | 
| 
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று, மகளிர் | |
| 
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென | |
| 
............................................பொலங்கலத்து ஏந்தி, | |
| 
அமிழ்து என மடுப்ப மாந்தி, இகழ்விலன், | |
| 
20 | 
நில்லா உலகத்து............... மை நீ | 
| 
சொல்ல வேண்டா................. முந்தறிந்த | |
| 
.............................................
 | |
| 
............................................னார் பாடியது.
 |