| முகப்பு | தொடக்கம் | 
| 
அகுதை | 
| 
 233 | 
| 
பொய்யாகியரோ! பொய்யாகியரோ! | |
| 
பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச் | |
| 
சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய | |
| 
பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ! | |
| 
5 | 
'இரும் பாண் ஒக்கல் தலைவன், பெரும் பூண், | 
| 
போர் அடு தானை, எவ்வி மார்பின் | |
| 
எஃகுறு விழுப்புண் பல' என | |
| 
வைகுறு விடியல், இயம்பிய குரலே. | |
| 
திணயும் துறையும் அவை.
 | |
| 
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.
 | 
| 
 347 | 
| 
உண்போன் தான் நறுங் கள்ளின் இடச் சில | |
| 
நா இடைப் பல் தேர் கோலச் சிவந்த | |
| 
ஒளிறு ஒள் வாடக் குழைந்த பைந் தும்பை, | |
| 
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின், | |
| 
5 | 
மணம் நாறு மார்பின், மறப் போர் அகுதை, | 
| 
குண்டு நீர் வரைப்பின், கூடல் அன்ன | |
| 
குவை இருங்கூந்தல் வரு முலை சேப்ப, | |
| 
................................................... | |
| 
என் ஆவதுகொல் தானே?..................................... | |
| 
10 | 
விளங்குறு பராரைய ஆயினும், வேந்தர் | 
| 
வினை நவில் யானை பிணிப்ப, | |
| 
வேர் துளங்கின, நம் ஊருள் மரனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
கபிலர் பாடியது.
 |