| முகப்பு | தொடக்கம் | 
| 
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் | 
| 
 242 | 
| 
இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்; | |
| 
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி, | |
| 
பாணன் சூடான்; பாடினி அணியாள்; | |
| 
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த | |
| 
5 | 
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை | 
| 
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார் பாடியது.
 |