| முகப்பு | தொடக்கம் | 
| 
கடிய நெடு வேட்டுவன் | 
| 
 205 | 
| 
முற்றிய திருவின் மூவர் ஆயினும், | |
| 
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே; | |
| 
விறல் சினம் தணிந்த விரை பரிப் புரவி | |
| 
உறுவர் செல் சார்வு ஆகி, செறுவர் | |
| 
5 | 
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை, | 
| 
வெள் வீ வேலிக் கோடைப் பொருந! | |
| 
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய | |
| 
மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கத நாய், | |
| 
நோன் சிலை, வேட்டுவ! நோய் இலையாகுக! | |
| 
10 | 
ஆர் கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்து, | 
| 
கடல்வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ | |
| 
நீர் இன்று பெயராவாங்கு, தேரொடு | |
| 
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் | |
| 
களிறு இன்று பெயரல, பரிசிலர் கடும்பே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
 |