| முகப்பு | தொடக்கம் | 
| 
கண்ணகி | 
| 
 143 | 
| 
'மலை வான் கொள்க!' என, உயர் பலி தூஉய், | |
| 
'மாரி ஆன்று, மழை மேக்கு உயர்க!' எனக் | |
| 
கடவுள் பேணிய குறவர் மாக்கள், | |
| 
பெயல் கண்மாறிய உவகையர், சாரல் | |
| 
5 | 
புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க் | 
| 
கை வள் ஈகைக் கடு மான் பேக! | |
| 
யார்கொல் அளியள்தானே நெருநல், | |
| 
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென, | |
| 
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி | |
| 
10 | 
நளி இருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண், | 
| 
வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று, | |
| 
நின்னும் நின் மலையும் பாட, இன்னாது | |
| 
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள், | |
| 
முலையகம் நனைப்ப, விம்மி, | |
| 
15 | 
குழல் இனைவதுபோல் அழுதனள், பெரிதே? | 
| 
திணை பெருந்திணை; துறை குறுங்கலி; தாபதநிலையும் ஆம்.
 | |
| 
அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைக் கபிலர் பாடியது.
 | 
| 
 144 | 
| 
அருளாய் ஆகலோ கொடிதே; இருள் வர, | |
| 
சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின் | |
| 
கார் எதிர் கானம் பாடினேமாக, | |
| 
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் | |
| 
5 | 
கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப, | 
| 
இனைதல் ஆனாளாக, 'இளையோய்! | |
| 
கிளையைமன், எம் கேள் வெய்யோற்கு?' என, | |
| 
யாம் தன் தொழுதனம் வினவ, காந்தள் | |
| 
முகை புரை விரலின் கண்ணீர் துடையா, | |
| 
10 | 
'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள், இனி: | 
| 
எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும், | |
| 
வரூஉம்' என்ப 'வயங்கு புகழ்ப் பேகன் | |
| 
ஒல்லென ஒலிக்கும் தேரொடு, | |
| 
முல்லை வேலி, நல் ஊரானே.' | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவள் காரணமாகப் பரணர் பாடியது.
 | 
| 
 145 | 
| 
'மடத் தகை மா மயில் பனிக்கும்' என்று அருளி, | |
| 
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை, | |
| 
கடாஅ யானைக் கலி மான் பேக! | |
| 
பசித்தும் வாரேம்; பாரமும் இலமே; | |
| 
5 | 
களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ் | 
| 
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி, | |
| 
'அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்!' என, | |
| 
இஃது யாம் இரந்த பரிசில்: அஃது இருளின், | |
| 
இன மணி நெடுந் தேர் ஏறி, | |
| 
10 | 
இன்னாது உறைவி அரும் படர் களைமே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவள் காரணமாக அவர் பாடியது.
 | 
| 
 146 | 
| 
அன்ன ஆக: நின் அருங் கல வெறுக்கை | |
| 
அவை பெறல் வேண்டேம்; அடு போர்ப் பேக! | |
| 
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன் புல | |
| 
நல் நாடு பாட, என்னை நயந்து | |
| 
5 | 
பரிசில் நல்குவைஆயின், குரிசில்! நீ | 
| 
நல்காமையின் நைவரச் சாஅய், | |
| 
அருந் துயர் உழக்கும் நின் திருந்துஇழை அரிவை | |
| 
கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன, | |
| 
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ, | |
| 
10 | 
தண் கமழ் கோதை புனைய, | 
| 
வண் பரி நெடுந் தேர் பூண்க, நின் மாவே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவள் காரணமாக அரிசில் கிழார் பாடியது.
 | 
| 
 147 | 
| 
கல் முழை அருவிப் பல் மலை நீந்தி, | |
| 
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை, | |
| 
கார் வான் இன் உறை தமியள் கேளா, | |
| 
நெருநல் ஒரு சிறைப் புலம்புகொண்டு உறையும் | |
| 
5 | 
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை | 
| 
நெய்யொடு துறந்த மை இருங் கூந்தல் | |
| 
மண்ணுறு மணியின் மாசு அற மண்ணி, | |
| 
புது மலர் கஞல, இன்று பெயரின், | |
| 
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவள் காரணமாக அவனைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.
 |