| முகப்பு | தொடக்கம் | 
| 
கரும்பனூர் கிழான் | 
| 
 381 | 
| 
ஊனும் ஊணும் முனையின், இனிது என, | |
| 
பாலின் பெய்தவும், பாகின் கொண்டவும், | |
| 
அளவுபு கலந்து, மெல்லிது பருகி, | |
| 
விருந்துறுத்து, ஆற்றி இருந்தனெமாக, | |
| 
5 | 
'சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு?' என, | 
| 
யாம் தன் அறியுநமாக, தான் பெரிது | |
| 
அன்பு உடைமையின், எம் பிரிவு அஞ்சி, | |
| 
துணரியது கொளாஅவாகி, பழம் ஊழ்த்து, | |
| 
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ், | |
| 
10 | 
பெயல் பெய்தன்ன, செல்வத்து ஆங்கண், | 
| 
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றி, | |
| 
சிதாஅர் வள்பின் சிதர்ப் புறத் தடாரி | |
| 
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி, | |
| 
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின், | |
| 
15 | 
இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு | 
| 
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால், | |
| 
இரு நிலம் கூலம் பாற, கோடை | |
| 
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை, | |
| 
சேயைஆயினும், இவணைஆயினும், | |
| 
20 | 
இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ! | 
| 
சிறு நனி, ஒரு வழிப் படர்க என்றோனே எந்தை, | |
| 
ஒலி வெள் அருவி வேங்கட நாடன், | |
| 
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும் | |
| 
அறத்துறை அம்பியின் மான, மறப்பு இன்று, | |
| 
25 | 
இருங் கோள் ஈராப் பூட்கை, | 
| 
கரும்பனூரன் காதல் மகனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடியது.
 | 
| 
 384 | 
| 
மென்பாலான் உடன் அணைஇ, | |
| 
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை | |
| 
அறைக் கரும்பின் பூ அருந்தும்; | |
| 
வன்பாலான் கருங் கால் வரகின் | |
| 
5 | 
...................................................... | 
| 
அம் கண் குறு முயல வெருவ, அயல | |
| 
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து; | |
| 
விழவு இன்றாயினும், உழவர் மண்டை | |
| 
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து; | |
| 
10 | 
................................................கிணையேம், பெரும! | 
| 
நெல் என்னா, பொன் என்னா, | |
| 
கனற்றக் கொண்ட நறவு என்னா, | |
| 
.....................மனை என்னா, அவை பலவும் | |
| 
யான் தண்டவும், தான் தண்டான், | |
| 
15 | 
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை, | 
| 
மண் நாணப் புகழ் வேட்டு, | |
| 
நீர் நாண நெய் வழங்கி, | |
| 
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை..... | |
| 
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு | |
| 
20 | 
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட | 
| 
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும், | |
| 
தின்ற நண் பல் ஊன் தோண்டவும், | |
| 
வந்த வைகல் அல்லது, | |
| 
சென்ற எல்லைச் செலவு அறியேனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
 |